October 20, 2021

இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. அறிக்கை

10 முதல் 24 வயது கொண்ட 356 மில்லியன் இளைஞர்கள் கொண்டு உலகில் அதிமான இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்று ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்த இடத்தை சீனா பிடித்துள்ளது.
edit nov 18
சீனா 269 மில்லியன் இளைஞர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா (67 மில்லியன்), அமெரிக்கா (65 மில்லியன்) பாகிஸ்தான் (59 மில்லியன்), நைஜிரியா (57 மில்லியன்), பிரேசில் (51 மில்லியன்) மற்றும் வங்காளதேசம் (48 மில்லியன்) என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தனது மக்கள்தொகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மக்கள்தொகை கொண்ட வளரும் நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சியை பார்க்க முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாடுகள் இளைஞர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் அவர்களது உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிகமாக முதலீடு செய்கின்றன. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தலைமுறையில் சேர்ந்தவர்களில் 600 மில்லியன் பெண்கள் சிறப்பு தேவைகள், எதிர்கால கனவுகள் மற்றும் சவால்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ‘தி பவர் ஆப் 1.8 மில்லியன்’ என்று வெளியிடப்பட்டுள்ளது. 10-24 வயது கொண்ட இளைஞர்களில் 28 சதவீதம் பேர் இந்தியர்கள். வறுமையான நாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத வண்ணம் அதிகம் ஆகியுள்ளது. உலகில் 10ல் 9 இளைஞர்கள் வளர்ச்சி அடையாத நாடுகளிலே வசிக்கின்றனர்.

இளைஞர்கள் புதுமைகளை படைக்கு படைப்பாளிகள், எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தலைவர்கள் ஆவர். ஆனால் அவர்களுக்கு போதிய திறமை வளர்ப்பு, உடல்நலம், முடிவெடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கை தொடர்பான உண்மையான தேர்வு ஆகியவற்றை கொண்டிருந்தால் மட்டுமே எதிர்க்காலத்தை மாற்ற முடியும். என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இன்றைய கணக்கின்படி இருக்கும் 1.8 மில்லியன் இளைஞர்கள் கையில் எதிர்க்காலத்தை மாற்றி அமைக்கும் மகத்தான வாய்ப்பு உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.