October 22, 2021

இளம் லேடி டைரக்டர் சந்திரா இயக்கும் கள்ளன் படம் ஸ்டார்ட் ஆகியாச்!

பார்த்திபன் கனவு’, ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘மந்திர புன்னகை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் தற்போது ‘கள்ளன்’ என்னும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கியது.


இப்படத்தை அமீரின் உதவியாளராக பணியாற்றிய சந்திரா இயக்குகிறார். இதில் நாயகியாக புதுடெல்லியை சேர்ந்த நிகிதா என்பவர் அறிமுகமாகிறார். மேலும் இவருடன் நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார் கள்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சினைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

படம் பற்றி கரு.பழனியப்பனிடம் கேட்ட போது, “ மந்திரப் புன்னகை’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து நான் நடிப்பதற்காக கதை கள் வந்தன. சந்திரா சொன்ன கதை நாயகனைச் சார்ந்து இல்லாமல் களம் சார்ந்து இருந்ததால் அதில் நடிக்க முடிவெடுத்தேன். இது வேட்டை சமூகம் பற்றிய கதை.விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பிருந்த சமூகம் இது. இன்றைக்கு அந்த சமூகம் இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் கதை. நீங்களும் இந்தப் படத்தின் கதையை படித்தால் இதை பெண் இயக்குகிறாரா? ஆண் இயக்குகிறாரா? என்ற எண்ணமே வராது. அப்படித் தான் கதையையும், களத்தையும் வடிவமைத்திருக்கிறார் சந்திரா. இயக்குநர் அமீரிடம் சினிமா பயின்றவர் அவர். எழுத்தாளர், கவிஞர். இந்தக் கதையை அவர் எழுதி முடித்து சில முக்கியமானவர்களிடம் படிக்கக் கொடுத்தபோது, அவரது திறமைக்கு வெகுவாக பாராட்டுகள் குவிந்தன” என்றார்