April 1, 2023

இளம்பெண்ணை வேவு பார்த்த மோடி மீதான புகாரை விசாரிக்க விசாரணை கமிஷன்!

குஜராத்தில் பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்ட விஷயத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இதை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
Modi and Bangalore woman 26
குஜராத் மேலிட உத்தரவின்பேரில் பெங்களூர் பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்டதாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.இந்த விவகாரத்தில் முதல்வர் மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மகளிர் அமைப்புகளும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளன.

இதையடுத்து வேவு பார்ப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கமிட்டியை குஜராத் அரசு அமைத்துள்ளது. அந்த கமிட்டி தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விசாரணை கமிஷன் சட்டத்தின் பிரிவு 3-ன் பட,ி பெண் பொறியாளரை குஜராத் போலீசார் வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.இந்த விசாரணைக் கமிஷனுக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை வகிப்பார் எனவும் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து பா.ஜ.,வின் அருண் ஜெட்லி கூறுகையில், ‘கூட்டாட்சி முறைக்கு எதிரான முடிவு இது. சட்டப்படி சந்திப்போம்,’ என்றார். அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Cabinet approves commission to probe Snoopgate
*************************************************************
The Union Cabinet on Thursday cleared a commission of inquiry that will investigate allegations of snooping on a woman and the misuse of state machinery by the Gujarat Government, which is headed by Bharatiya Janata Party (BJP) prime ministerial candidate Narendra Modi.