September 21, 2021

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இலங்கையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாயின. இதில், இலங்கை சுதந்திர கட்சியின் வேட்பாளர் ராஜபக்சேவை தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி யின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணி வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்கவுள்ளார்.
srilanka aug 19
இலங்கையில் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொலைபேசியில் ரனில் விக்ரமசிங்கேவை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, ரனில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,ரனில் தலைமையில், இலங்கை இந்தியா உறவு மேலும் வலுப்பெறும் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்ததற்கு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவும் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 29 இடங்களுக்கு கட்சிகள் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்ச இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தேர்தல் முடிவுகள் செவ்வாய்க் கிழமை மாலை வெளியாகின. மொத்தமுள்ள 225 இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள் ளன. இதில் 93 இடங்கள் நேரடியாக வெற்றி பெற்றவை; 13 இடங்கள் வாக்கு விகிதாசார அடிப்படையில் கிடைத்தவை. இதேபோல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 95 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் 83 இடங்கள் நேரடியாக வெற்றி பெற்றவை; 12 இடங்கள் வாக்கு விகிதாசார அடிப்படையில் கிடைத்தவை. ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 6 இடங்கள் (வாக்கு விகிதாசாரபடி கிடைத்த 2 இடங்களையும் சேர்த்து) கிடைத்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 16 இடங்கள் (வாக்கு விகிதாசாரபடி கிடைத்த 2 இடங்களையும் சேர்த்து) கிடைத்துள்ளன. இதுதவிர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் கிடைத்துள்ளது.

இலங்கையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 7 இடங்கள் தேவை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் இன்று அதிபர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்வார் என்றும் அமைச்சரவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே, தனது மறு அரசியல் பிரவேசமாக பிரதமர் ஆகலாம் என்று தேர்தலில் போட்டியிட்டார். தற்போது அவர் அடைந்துள்ள தோல்வியால், ராஜபக்சேவின் கனவு தகர்ந்ததோடு அவரது அரசியல் மறுபிரவேசமும் தடுக்கப்பட்டுள்ளது.