இலங்கை : தேவாலயங்களில் வரும் ஞாயிறும் வழிபாடுகள் ரத்து!

இன்னமும் பீதி விலகாத நிலையில்   இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

பயங்கரவாதிகள் நடமாட்டம் இன்னும் இருப்பதால், மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக இலங்கை உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இலங்கை முழுவதும் கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வழிபாடுகள் ரத்து செய்யப் படுவதாக அந்நாட்டு கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மறுஉத்தரவு வரும்வரை இந்த கூட்டங்களை ரத்து செய்ய கார்டினல் ரஞ்சித் உத்தரவிட்டிருப்பதாக பேராயர் இல்ல செய்தித் தொடர்பாளர் எட்மண்ட் திலகரத்னே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேவாலயங்களில் பொது திருப்பலிகள், 5-ந் தேதி தொடங்குவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. தேவாலயத்துக்குள் பை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.