September 18, 2021

இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.!

“உலகத்திலே நான் கண்ட ஒரே நிறைவேறாத பிரச்சினையான இலங்கைத்தமிழர் நான் ஆரம்ப பள்ளி போகும் நேரத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சினை – ஏன் – இதை ஒரு பிரச்சினையாக கொள்ளாமல் இதை வைத்து வியாபரமே செய்தார்கள் பல மரண வியாபாரிகள் – இந்த பதிவு நிறைய டைமென்ஷ்ன்களை கொண்டுள்ளது – உள்ளது உள்ள‌படியே பிரதிபலிக்கும் – உங்களுக்கான ஒரு கூட்டுத் தொகுப்பு….”
nov 17 - crocodile-cry.
தமிழ் ஈழமும் – விடுதலை புலிகளும் – இது ஒரு முடிந்து போன சகாப்தம். எதற்க்காக ஆரம்பித்தோம் என்ற குறிக்கோளை நடுவில் கொஞ்சம் கொஞ்சமாய் சில விளங்காத உள்ளூர் வெளியூர் அரசியல் வியாதிகள்ளால் திசை மாறி, சில செய்ய கூடாத தவறுகள், பல வாழ் நாள் தியாகங்கள் கடைசியில் தீவரவாதி ரேஞ்சுக்கு கிளாஸிஃபை செய்யபட்ட‌ன.

இலங்கையில் உள்ள தமிழர்கள் – இவர்கள் இரண்டு ரகம். வடக்கு தமிழர்கள் அவர்களை தவிர்த்து இலங்கையின் மொத்த தமிழர்கள். என்னைக் கேட்டால் இவர்கள் தான் முதல் ஆள்காட்டிகள், துரோகிகள், கூடவே இருந்து கழுத்தை அறுத்த நரித்தனம் வாய்ந்த நல்லவர்கள். இன்றும் இவர்களுக்கு வடக்கில் கஷ்டபடும் தமிழர்கள் என்றால் என்னவென்றே தெரியாது.

இலங்கையில் உள்ள இஸ்லாமிய தமிழர்கள் – இவர்களை பற்றி அதிகம் சொல்வதை விட ஒரே வசனம் – ராஜபக்சே இவர்களை விட எவ்வளவோ மேலானவர்.

இந்தியாவின் நேஷனல் தலைவர்கள்…………இலங்கை ஒரு நாடாக மதிக்கும் இவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இவர்கள் நினைக்காமல் இருந்ததே காரணம். ஆரம்பத்தில் சகுணி வேலையும் பின்பு அதுவே இவர்களுக்கு வேட்டு வைக்க பின்பு சனியன் சகடையாகி போனார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா வேலை செய்து இவர்கள் ஒரு வரலாற்றூ குற்றத்துக்கு துனை போயினர், குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூன்டியவருக்கே அதிக தன்டணையை மதித்து கொடுக்கு நாடான இந்தியா…………….

இந்தியாவின் இலங்கை தமிழர்களின் மேல் அக்கறை கொண்ட முதலை கண்ணீர் தமிழக அரசியல் வியாதிகள் – இந்த வகையில் என்னை கேட்டால் ஒரு ஒரு அரசியல் வியாதி கூட உண்மையாய் நடந்ததே இல்லை. அனைவரும் அக்மார்க் பச்சை துரோகிகள். இவர்களுக்கு தேவையான போதெல்லாம் கோலி சோடாவை உடைச்சி தெறிச்சி எழுப்பி அதன் மேல் காலம் காலமாய் கண்ணீர் விட்டவர் மாதிரி இமேஜை காட்ட முயல்வர். மொத்ததில் இவர்கள் அனைவரும் லோக்கல் கருணாக்கள் / ராஜபக்ஷேக்கள் / மோடி மஸ்தான்கள்.

வெளி நாட்டு இலங்கை தமிழர்கள் / டெவலப்படு நேஷன் புது குடிமகன்கள் – இவர்களின் போராட்டம் சினிமா ஹீரோ ஸ்டன்ட் மாதிரி இருக்கும் ஆனா இருக்காது. இதில் கொஞ்சம் பழுத்த முன் தலைமுறையினர் மட்டும் கனடா / ஐரோப்பாவின் சில அரசியல் தலைகளை வைத்து தங்களால் முடிந்த நெருக்கத்தை கொடுத்து கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் அவ்வளவாக இல்லை. இவர்களின் உப்பு கண்டத்தில் இருந்து ஊறுகாய் வரை இந்த நாட்டில் இருந்து சிங்களவன் தயாரித்து அனுப்பியதை சுவைக்காமல் இருந்ததில்லை. இவர்கள் வணிகத்துக்கு எந்த சிங்களனுடனும் கைக்குலுக்காமல் இருந்ததில்லை.

இலங்கையின் கொடுமைக்காக வேற்று நாட்டில் குடியேறி பின்பு வருடா வருடம் அந்த நாட்டு பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு சுற்றுலா முதல் சுருள் வைத்து கல்யாணம் செய்யும் எவர் பங்க்ஷனுக்கும் செல்லாமல் இருந்ததில்லை. இரண்டாம் தலைமுறை இலங்கை தமிழர்களின் பெரும்பாலான‌ பிள்ளைகளூக்கு துளியளவும் இலங்கையை பற்றீயோ அல்லது இலங்கை தமிழர்கள் பற்றியோ கவலை என்ன எண்ணமே இல்லை என்றால் இது தான் உண்மை.

இந்தியாவின் அத்தனை ஆம் ஆத்மிகள் – வெளி நாட்டு இலங்கை தமிழர்கள் ஈழ‌ பாசத்தை தமிழ் நாட்டு ஆட்கள் மூலம் ஏவி கொஞ்ச நாட்களில் இந்தியாவின் அத்தனை பேரும் தமிழ் நாட்டின் தமிழ்ர்கள் மீது வெறுப்பை உமிழ வைக்க முனைகின்றனர்….. இதை விட அதிக கொடுமை நடக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களை கண்டு கொள்ளாத தமிழர்களுக்கு ஏன் அண்ணிய தேசத்த்து முடிந்து போன அத்தியாத்துக்கு நாம் முட்டு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக கொந்தளிக்கின்றனர்.

சேனல் 4 போன்ற – சென்சேஷன்களை உருவாக்கும் மீடியாக்கள் – இவர்கள் ஆட்காட்டி ஆட்களிடம் இருந்து அவ்வப்போது காசு கொடுத்து இன அசிங்கத்தை உலகத்துக்கு அரங்கேற்றீ அவ்வபோது அவர்களின் டி ஆர் பி ரேட்டை எகிற வைக்கும் இன்னொரு வியாபார சூட்சமம்.

நான் கூறியது சிறிய கோர்வை – இது தான் முப்பது ஆண்டுகளின் அமோக வியாபார சீக்ரெட் ரெசிப்பீ இது தான் என்றால் அது அதிகமில்லை………இதை அனைத்தும் படித்தால் தெரியும் பற்று எங்கே இருக்கிறது பசப்பும் பாசாங்கை தவிர…