October 16, 2021

இலங்கை டீஎஸ்டேட் நிலச்சரிவில் புதைந்து 20 பேர் பலி, 300 பேர் மாயம்

இலங்கையில் பதுளை மாவட்டம் மீரியபெத்தை தேயிலை எஸ்டேட் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் சடலம் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலச்சரிவில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்றும் மேலும் 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அங்கிருந்து வரும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
srilanka slide
இலங்கையின் தென் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களக கடும் மழை பெய்து வருகிறது. இதில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 120 மைல் தொலைஅவில் உள்ள ஹால்டுமுல்லா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 140 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் வீடுகள் வசித்த 400க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து உள்ளனர். இதில் 10 பேரின் உடல்கள் மீடகப்பட்டன. 250 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை . தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பேரிடர் மேலாண்மை மந்திரி மஹிந்தா அமரவீரா,”நிலசாரிவு 3 கிலோமீட்டர் தூரம் வரை ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் என்றும் அந்த பகுதியில் இருந்து வேறு இடம் செல்லுமாறு ஏற்கனவே கிராமத்தினர் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கையை கேட்கவில்லை” என கூறினார்.