October 16, 2021

இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது! சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசு

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு சிபாரிசு விடுத்துள்ளார்.
rajapakse oct 20
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”இலங்கை அதிபர் விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பங்காற்றியுள்ளார் எனவே அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் அனுப்பிய கடிதம் கிடைத்துவிட்டதாக மோடி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.