October 7, 2022

இலங்கையுடன் மோதப் போகும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் அடித்த கருண்நாயர், அதன் பிறகு தொடர்ச்சியாக சொதப்பியதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்து ஓய்வு எடுத்த தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்பியிருக்கிறார். 3–வது தொடக்க ஆட்டக்காரராக அபினவ் முகுந்த் இடம் பிடித்துள்ளார்.

16 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.