October 19, 2021

இலங்கைத் தமிழர் இன்னலைக் காட்டும் ‘சிவப்பு’ !-

க்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி)லிட் – புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைத்து வழங்க கழுகு வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு”
இதில் ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோணார் என்ற வேடமேற்று இருக்கிறார். நாயகனாக நவீன்சந்திரா நடிக்கிறார்.கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா,செல்வா,போஸ்வெங்கட்,ஏ.வெங்கடேஷ், அல்வாவாசு, பூராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
cine - sivappu 1
படம் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்…..” சிவப்பு என்பது நிறம் மட்டுமல்ல பல உணர்ச்சிகளின் உறைவிடம் தான் சிவப்பு ..அதில் கோபம்,தோழமை,காதல் வறுமை,புரட்சி என்று நிறைய உணர்வுகளின் உள்ளடக்கம் தான் சிவப்பு நிறம். அதே மாதிரி இந்த திரைக்கதையில் இது அத்தனையும் இருக்கும்.அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலமாக இருப்பவர் கோணார்.இவரது கட்டுமான நிறுவனத்தில் வேலை கொடுத்து வாழ வைக்கிறார்.
cine - sivappu 2
அதே சமயம் இது முழுக்க இலங்கை சம்பந்தப்பட்ட படம் என்று சொல்ல முடியாது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம்தான் கதைக் களம். அங்கே ராஜ்கிரண் மேற்பார்வை யாளரா இருக்கிறார். அகதி முகாம்ல இருக்குறதுக்கு பலருக்கு விருப்ப மில்லை. அங்கிருந்து ஆஸ்திரேலி யாவுக்கு தப்பிச்சுப் போகணும்னு நெனைக்கிறாங்க. அங்கே போனா சீக்கிரம் குடியுரிமை வாங்கிடலாம்கிறது அவங்க எண்ணம். உயிரைப் பணயம் வைச்சு முகாம்ல இருந்து போறாங்க. அப்படி போறவங்க, சிலரால ஏமாற்றப் படுறாங்க. முகாமுக்கும் திரும்ப முடியாம, ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாம தவிக்கிறாங்க. அப்போ.. ராஜ்கிரண்கிட்ட தஞ்சம் கேட்குறாங்க. அந்த இடத்துல இலங்கைப் பெண்ணுக்கும் தமிழ்ப் பையனுக்கும் நடக்குற காதல் கதை. அந்த காதலால் ஏற்படுற பிரச்சினைகள்தான் ‘சிவப்பு’ கதை.” என்கிறார்