September 21, 2021

இருபது ஆண்டுகளில் இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை 55 சதம் அதிகமாயிடுச்சீ.!

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் குடி தொடர்பான நோய்களால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் என்ற நிலையில் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
alchol
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் 1992 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் மிக வேகமாக மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கூறபட்டுள்ளது. அதிலும் நாடெங்கும் திருமணம் முதல் கோயில் விழா வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் மது விருந்து நடக்கிறது. இதுபோன்ற மோசமான கலாசாரமாகி விட்ட மதுப்பழக்கத்தால் குடும்ப உறவுகள் சிதைவதுடன் சிறு வயதிலேயே பல்வேறு நோய்கள் காரணமாக உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. மேலும் தற்கொலை நிகழ்வுக்கும் மது பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது.

பெரியவர்கள் மட்டுமல்ல பள்ளி மாணவர்கள் கூட மதுவுக்கு ஏங்கி நிற்கின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் 70 சதவீத இந்தியர்கள் குடிகாரர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது மேல்நிலை பள்ளிகள் 5030 உள்ளன. கல்லூரிகள் 1628. ஆனால் மதுபான கடைகளின் எண்ணிக்கை 6833.

தற்போது வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரப்படி 30 சதவீதம் இந்தியர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், அதில் 4 முதல் 13 சதவீதம் பேர் நாள்தோறும் குடிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில் 50 சதவீதம் பேர் மிகவும் அபாயகரமான குடிகார்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.