October 16, 2021

இருட்டறை உணவகம் – திரையரங்கம்! கண் பார்வையற்றோர் சங்கத்தினர் தொடங்கினர்

உணவகங்களுக்குச் சென்றால் பளிச்சென்று விளக்குகள் ஒளிரும் காட்சியைத்தான் நாம் காண்போம். திரையரங்குகளிலும் கண்களைக் கவரும் வண்ண விளக்கு கள் ஜொலிக்கும் காட்சியை பார்ப் போம். இவை எதுவுமே இல்லாத இருட்டறையில் இயங்கும், உண வகத்துடன் கூடிய திரையரங்குகள் ஒன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அண்மையில் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஆமதாபாத் கண்பார்வையற்றோர் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.
blind hotel
இங்குள்ள சுவர் அறைகள், தரைப் பகுதி, திரைச்சீலைகள், நாற்காலிகள், மேஜைகள், குளிர் சாதன பெட்டிகள், மின்விசிறிகள் என அனைத்தும் கருப்பு வண்ணம் பூசப்பட்டு காட்சி அளிக்கிறது. எந்த இடத்திலும் ஒளிரும் பொருள்கள் கிடையாது.இதனால் இங்கு நுழைந்த உடனேயே ஒருவருக்கு இருட்டு உலகத்துக்குள் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

அதேபோல் உணவகத்தில் நீங்கள் சாப்பிடுவதற்கான உணவு, தட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதையும் காணவே முடியாது. இங்கு ஒரே நேரத்தில் 50 பேர் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

திரையரங்கைப் பொறுத்தவரை இந்தி நடிகர் அமீர்கான் நடித்த தாரே ஜமீன் பார் படத்தின் ஆடியோ ஒலிபரப்பாகிறது.

இந்த இருட்டறை உணவகம்- திரையரங்கம் குறித்து, கண்பார்வையற்றோர் சங்கத்தின் இயக்குநர் நந்தினி ராவல்,”இது புதுமையான விஷயம் அல்ல. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற உணவகங்கள் ஏற்கெனவே உள்ளன. எனினும், இந்தியாவில் இது போன்ற உணவகம்-, திரையரங்கம் இங்குதான் முதல் முறையாக தொடங்கப்பட்டு இருக்கிறது.கண்பார்வை உள்ளவர்கள், பார்வை இல்லாதவர்களின் நிலையை உணர்ந்து கொள்ளவும், எங்களைப் போன்ற அனைவருக்கும் உடல் உறுப்புகள் நல்ல முறையில் இயங்கும் நிலையில்தான் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தவும் இந்த உணவகம்-, திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 80 லட்சம் முதல் 90 லட்சம்வரை செலவு செய்திருக்கிறோம். இங்கு சேவை செய்பவர்கள் அனைவருமே நன்கு பயிற்சி பெற்ற, கண்பார்வையற்றவர்கள் ஆவர்.”என்று அவர் கூறினார்.

எனினும், உணவகம்-, திரையரங்கின் கும்மிருட்டை யாரும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இரவு நேரத்திலும் கண்காணிக்கக்கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த திட்ட மிட்டு இருக்கிறோம் என்று கண் பார்வையற்றோர் சங்கத்தின் சமூக ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் திரிவேதி குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/component/content/article/35-india-news/90582-2014-11-05-11-22-08.html#ixzz3IujeJXjH