March 25, 2023

இரண்டு டிக்கெட் வாங்கினால் ஒரு சீட் காலி : கொரோனா-வுக்கு பின்னர் தியேட்டர்கள் ஐடியா!

நம்ம நாட்டிலே எக்கச்சக்கமான சினிமா தியேட்டர்களை வைச்சிருக்கும் நிறுவனம் பிவிஆர்.

இந்தியாவோட மிகப்பெரிய திரையரங்கச் சங்கிலி இவர்களுடையதுதானாம்.

இப்ப இருக்கும் 144 முடிஞ்சு மறுபடியும் ஜனங்க கூட்டமாக ஒரு இடத்தில் சேருவது மிக பெரிய சிக்கலும் சவாலிம் நிறைஞ்சது என்பதால் மக்களைத் தியேட்டர் பக்கம் வரவழைக்கப் ஏக யோசனைகளை யோசிச்சுக்கிட்டு இருக்காய்ங்களாம் .

அதுபற்றி விசாரிச்சப்போ, “தியேட்டர்களில் கிருமிநாசினி தெளிச்சு சுகாதாரமாக வைத்திருப்பதோடு, தியேட்டருக்குள் சமூக விலகலைக் கொண்டு வரலாம் என யோசிச்சிக் கிட்டு இருக்கோம்.

உதாரணத்துக்கு நீங்கள் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கியிருந்தால் உங்களுக்குப் பக்கத்தில் ஒரு இருக்கையை காலியாக விட்டே அடுத்த டிக்கெட்டைப் பதிவு செய்வோம்.

மக்கள் மீண்டும் பாதுகாப்பாக உணரும்வரை ஒரு சில வாரங்களுக்கோ, ஒரு மாதத்துக்கோ இதுதொடரும். எல்லாவற்றையும் போல திரையரங்கமும் பாதுகாப்பானதுதான் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வரவழைக்க நிறைய விஷயங்கள் செய்ய ரெடி ஆகிகிட்டு இருக்கோம்.

குறிப்பா தூய்மைப்படுத்துதலில் இருந்து பணியாளர் பயிற்சி வரை ஒவ்வொரு கட்டத்திலும் பல விஷயங்களைச் சிறிதும் பெரிதுமாகத் திட்டமிடுகிறோம்.

கூல் ட்ரிங்ஸை வெறும் கேன்களில் மட்டும் விற்கலாமா என்று பெப்சியிடம் பேசி வருகிறோம். இது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்று தெரியாது. ஆனால், நிறைய யோசிச்சிக்கிட்டே இருக்கோம்ம்.

ஹூம்ம் எங்கள் பி வி ஆர் நிறுவனம் செயல்பட ஆரம்பித்த இந்த 21 வருடங்களில் ஒரு தபா கூட அம்புட்டு தியேட்டர்களையும் மூடவேண்டிய சூழல் வல்லை.

லாபம், நஷ்டம் மாற்றி மாறி வந்துருக்கிறது.

ஆனால் எங்கள் வருமானம் இப்ப மாதிரி ஜீரோவில் இருந்ததில்லை. நாங்கள் மட்டுமல்ல, உலக அளவில் இந்தத் துறையில் நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மிகவும் கடினமான சூழல்.

இது எதுவும் கட்டாயத்தின் பேரில் நடக்கவில்லை. ஏனென்றால் இந்தப் பிரச்சினையின் தீவிரம் எவ்வளவு தூரம், எப்போது நாங்கள் மீண்டும் அரங்குகளைத் திறப்போம் என்று தெரியாது. சூழல் சற்று சரியானால், நாங்கள் அரங்குகளைத் திறக்கும் நிலையில் உள்ளோம். இதுவே முடிவு.

அடுத்த சில மாதங்கள் இந்த நிலை தொடர்ந்தாலும் எங்கள் தரப்பில் யாரும் வேலை இழக்கமாட்டார்கள். ஆனால் சம்பளத்தில் குறைக்கப்படும். ஏனென்றால் எங்களுடையது பெரிய அணி. இந்த ஊரடங்கு முடிந்த பின் மீண்டும் நிர்வாகச் சூழல் ஆய்வு செய்யப்படும்.

இப்போது ஸ்ட்ரீமிங் தளங்கள் புதிய கதைகளுக்கான பசியைப் போக்கியுள்ளன. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, நம் தேசம் முழுவதும் இரண்டு லட்சம் பேர் பிவிஆர் திரையரங்குகளுக்கு வந்தனர். அப்போது 50 சதவீத அரங்குகள் மட்டுமே இயக்கப்பட்டிருந்தன. வீட்டில் இருப்பவர்கள் வெளியே வர எதுவும் தரத் தயாராக இருக்கிறார்கள். நாம் சமூகத்துடன் கலக்கும் இனம். எங்கள் பி வி ஆர் குரூப் சினிமா வியாபாரத்தில் இருப்பதாகச் சொல்ல மாட்டோம். நாங்கள், வீட்டிலிருந்து வெளியே வந்து பொழுதுபோக்கும் வியாபாரத்தில் இருப்பதாகத்தான் சொல்வோம். அது கண்டிப்பாக எழுச்சி பெறும்- அப்படீங்கற நம்பிக்க இருக்கு- ந்னு சொல்றாங்க