September 20, 2021

இப்போ இந்தியாவில் தங்கத்தின் தேவை கால் பர்சண்ட் கம்மி: உலக தங்க கவுன்சில் தகவல்

2014-15ம் நிதி ஆண்டில் 4,400 தங்க கடத்தல் வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 4,480 கிலோ தங்கம் பிடிப் பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,120 கோடியாகும். கடந்த நிதி ஆண்டில் 252 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 2012-13ம் நிதி ஆண்டில் 870 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. 400 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று வருவாய் புலனாய்வு துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2013-14ம் ஆண்டில் 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் 2,760 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
gold
நடப்பு நிதிஆண்டில் இதுவரை 1.69 லட்சம் கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதன் மதிப்பு ரூ.38,608 கோடியாகும். தங்கத்தின் தேவை உயர்ந்து வருவது இறக்குமதியை அதிகரிக்க செய்யும் என்று வருவாய்வு புலனாய்வு துறையின் உயரதிகாரி தெரிவித்தார். தேவை அதிகமாக இருப்பதால் தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது என்று கஸ்ட.ம்ஸ் அதிகாரிகள் சொன்னாலும் இந்தியாவில் இந்த ஆண்டின் 2-ஆவது காலாண்டில் தங்கத்தின் தேவை 25 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக, உலக தங்க கவுன்சிலின் இந்திய நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர், “தங்கத்தின் தேவை – சந்தைப்போக்கு’ பற்றி உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப்படி, நிகழாண்டின் 2-ஆவது காலாண்டில் தங்கத்தின் மொத்தத் தேவை 915 டன்னாக உள்ளது.கடந்த ஆண்டின் 2-ஆவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, 12 சதவீதம் தேவை குறைந்துள்ளது. அதே போல, ஒட்டுமொத்த நகைகள் தேவையும் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 595-லிருந்து 513 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆசிய நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

குறைவான பொருளாதார வளர்ச்சி, பங்குச் சந்தையில் ஏற்றத் தாழ்வு ஆகியவற்றால் சீனாவில் தங்கத்தின் தேவை 5 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 174 டன்னாகக் குறைந்துள்ளது. இந்தியாவிலும், கடந்த ஆண்டு பருவம் தவறிப் பெய்த பலத்த மழை, பஞ்சம் ஆகியவை கிராமப்புறங்களின் வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவையே, நாட்டில் தங்கத்தின் தேவை குறைவதற்கு பிரதானக் காரணமாகும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் முதல் அரையாண்டில் (2014) நகைகள் தேவை 276.1 டன்னிலிருந்து 268.8 டன்னாக வீழ்ச்சியடைந்தது.

மாறாக, கடந்த ஆண்டில் அமெரிக்காவில் தங்கத்தின் தேவை 2 சதவீதமும், ஜெர்மனியில் 7 சதவீதமும் அதி கரித்தது. ஐரோப்பாவிலும் தங்கத்தின் தேவை அதிகரித்தது. பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் 6 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் தேவை வளர்ச்சி கண்டது. நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் தங்கத்தின் தேவை 154 டன்னாக (25 சதவீதம்) வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. முதல் அரையாண்டுடன் கணக்கிடும்போது, 7 சதவீதம் வீழ்ச்சியாகும். அதாவது, தங்கத்தின் தேவை 372-லிருந்து 346.2 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. வரவிருக்கும் திருமணம், விழாக்கால சூழ்நிலைகளால், இந்தியாவில் நகைகளின் சந்தை வாய்ப்பு ஆரோக்கியமாக உள்ளது. இந்தியாவில் முழு ஆண்டுக்கான தங்கத்தின் தேவை 900 முதல் 1000 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.