October 21, 2021

இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்!

ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க சென்றபோது காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னை கொண்டு வரப்பட்ட லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு ஆறுதல் கூறினார்.
9 - jaya met constables in hospital
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “முதலமைச்சர் ஜெயலலிதா, எஸ். லட்சுமணனின் வீரதீரச் செயலைப் பாராட்டி, தமிழக மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்து அதற்கான காசோலையினை அவரது மனைவி மதுபென் அவர்களிடம் வழங்கினார்கள்.

மேலும் மருத்துவமனையில் லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பிடத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்குமாறு அறிவுறுத்தினார்கள். அப்போது ஆய்வாளர் லட்சுமணன் அவர்களின் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது