September 27, 2021

“இன்ஷா பெருமாளும் – கர்த்தர் முருகனும்” ……………………..

பேனா என்பது எத்தனை வலியது என்பதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை – அல்லது அதை பற்றி அதிகம் கூற எனக்கு அவ்வளவாய் தகுதியில்லை என்பதே என் கருத்து. இனம் பிரிக்காமல் எதையோ உண்ணும் சிலதுகளும், மதம் பிரித்து சில்லரைகளை தேத்தும் பலருக்கும் அதிகபட்ச வித்தியாசம் எவ்வளவு யோசித்தும் எனக்கு புலப்படவே இல்லை……………!
ravi jan 18
கருத்து சுதந்திரம் என்ற ஓட்டை தோணியை வைத்து இப்போது ஒரு தீவிரவாதம் அல் கொய்தாவை விட ஒங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பிரம்மாவுக்கு பிரம்மா என்ற நினைப்பு தான். சிலர் எதையாவது எழுத வேண்டியது, சிலர் எதையாவது படமாக்குவது பின்பு நான் செத்துவிட்டேன் – நான் இந்த நாட்டை விட்டே போய்விடுவேன் என்று பின்பு எக்ஸ்ட்ரா லார்ஜ் பப்ளிகுட்டியை தேடுவது – இதற்க்கு ஆதரவு என்று ஒரு கூட்டமும் – இதற்க்கு எதிர்ப்பு என்று ஒரு கூட்டமும் கொடியை புடிச்சிகிட்டு லாந்த வேண்டியது – இதுக்கு நடுவுல அந்த படைப்பை ஆன்லைனில் / இன்பாக்ஸில் / வாட்ஸப்பில் / கெட்ச்சபில் எல்லா இடத்திலும் கசிய விட வேண்டியது – அதை காசுக்கு விற்றாலும் இத்தனை கிடைத்திருக்காது அதே பப்ளிகுட்டிதான் இந்த மாதிரி கிடைத்து விடும் பப்ளிகுட்டி – மூத்திரசந்தில் சந்தனம் விற்ற் கதை தான்.

சிந்தனையாளர்க்கு தேவை என்ன? – சீர் திருத்த வேண்டியவர்களுக்கு தேவை என்ன? – சிறப்பு பதிப்பாளர்களுக்கு தேவை என்ன? – நோக்கம் பலது பலவாறு இருப்ப்பின் இவர்களின் நோக்கம் பெத்த காசும் / பெத்த பப்ளிகுட்டியும் தான் பாட்டம் லைன். எப்படி ஃபேஸ்புக்ல பப்ளிக் போஸ்ட் போட்டுவிட்டு ஒன்லி மீ ஆப்ஷன் அளவுக்கு அங்காலாய்ப்பது காமன் ஃபேக்டரோ அதே நிலை தான் இங்கே. எழுத்தாளர் / சிந்தனை சிற்பி / கலை தொப்பி என பல பேர். இவர்களை பற்றீ பேச எனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று உங்களின் காது சிவக்கும் முன் நானே கூறிவிடுகிறேன் –

10 ரூபாய் தக்காளி சோற்றுக்கு கூட இருபது பக்கத்துக்கு மிகாமல் விமர்சனம் எழுதும் சராசரி சாமூன்டியாக இருந்து விட்டே போகிறேன். பாரீஸில் பல உயிரை பழி வாங்கிய கருத்து சுதந்திரம் உலகத்துக்கு என்ன உணர்த்தியது – நீ ஒரு மதத்தை பழி / பாழ் செய் /பக்காவாய் என்ன வேணாலும் செய் – அதற்கு சில மனித உயிர்களை கூட காவு வாங்கு ஆனால் ஆயிரத்தில் இருக்கும் உன் பத்திரிக்கை லட்சக்கணக்கில் விற்கும் அளவுக்கு உயர்த்தும் வரை உன்னுடைய எழுத்தாணியை அப்பாவிகளின் ரத்ததையும், அவர்கள் வணங்கும் ஆன்டவனையும் அட்டாக் பண்ணு – ஆனா துட்டு தான் முக்கியம் – இது தானப்பா இன்றைய கருத்து சுதந்திரம் சீஸன் 2?

எந்த ஒரு நம்பிக்கையையும் நகைக்கும் முன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒற்றை கருத்து – நாமும் ஏதாவது ஒரு தொப்புள் கொடி வழி வந்தவர்கள் தான் என்று. சில பிறப்புகள் உண்மையிலே அவர்களை பெற்றார்களா அல்லது அளவுக்கு அதிகமாய் லாக்ஸட்டிவ் சாப்பிட்ட வகையில் என்னாவாகுமோ அந்த வகையில் பிறந்தார்களா என்று தான் எண்ண தோன்றுகிறது. எழுதுவதற்க்கோ – படம் எடுப்பதற்க்கோ – படம் போடுவதற்க்கோ ஆயிரம் வழிகள் இருந்தாலும் இதையெல்லாம் புறந்தள்ளி சிலர் புரட்சி செய்கிறேன் என்ற புண்ணாக்கு எண்ணத்தில் புண்படவைக்கும் எந்த் ஒரு மனித செயலும் பூமாராங் செயல் தான் – பூமாராங் போல அது உங்களை தாக்காமல் அது சமுதயாத்தை சட்னியாக்கும் என்று எழுதும் போதே கொக்கரிக்க தொடங்கினால் அது எத்தகைய பேனாவின் வடிவமாய் இருந்தாலும் என்னை பொறுத்த வரை ஆருன்டு இவட சோதிக்கான் – அஞ்சரைக்குள்ள வன்டி படைப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு ஏர் பிடிக்கும் விவசாயி எப்போதோ வரப்போகும் உங்கள் பசிக்கு இன்று உழைத்து பாதுகாத்து வியர்வை சிந்தி சிலர் அதிலும் ஒரு படி மேல் போய் தற்கொலையும் செய்து உனக்கு அரிசியோ கோதுமையோ தருபவனும் சிந்தனையாளர் தான் – சிறப்பு மனித பிரம்மாதான் – ஆனால் அவன் நினைத்தால் புரட்சி செய்கிறேன் என்று ஒவ்வொரு விவசாயியும் கஞ்சா விவசாயம் செய்ய தொடங்கினால் இந்த மண் / இந்த மக்கள் / இந்த பூமிக்கு என்னவாகுமோ அந்த நிலைமை தான் இன்றைய சிந்தனை சிற்பிகளின் தவறான கருத்து சுதந்திர கையாலாகாத்தனம்.

அத்தனை வாசகர்களுக்கு படிப்பறிவு கொடுக்கும் நீங்களும் ஒரு கல்வி கடவுளாய் தான் இருக்க வேண்டுமே தவிர கலவி கடவுளின் கசமுசாக்கள் என காசுகளுக்காக விலை போகும் விலை மாதாகிவிடக்கூடாது. எத்தகைய ஒரு நல்ல சிந்தனைக்கும் – மிரட்டல் கிடையாது / மிசா கிடையாது / மிக்சர் சாப்பிட வேண்டிய வேலையும் கிடையாது. பேனா வலியது அதை வைத்து பேன் நசுக்க வேண்டுமா அல்லது பெரிய படைப்பாளனாக வேண்டுமா என்பது உங்கள் கையில்…………….

இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து