September 18, 2021

“இன்னாருக்கு இன்னாரென்று” – ஆல்பம்

“இன்னாருக்கு இன்னாரென்று”-அர்த்தபுஷ்டியான அந்த இரண்டு வார்த்தைகளையே தலைப்பாகக் கொண்டு உருவாகிவரும் இந்தப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல், குடிப்பதை பொழுதுபோக்காகவும், பேஷனாகவும் வைத்துக் கொண்டிருக்கும் இந்த கால இளைஞர்கள் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் தப்பிக்கவும் வழிவகுக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

“கேட்டுக்க நண்பா கேட்டுக்க..” எனும் பல்லவியுடன் தொடங்கித்தொடரும் அப்பாடலில்,
“இந்த போதை நீ வந்தபாதை..
நம்ம நாட்டையும் வீட்டையும் அழிச்சுடுமே..
பல மேதை சொன்ன கீதை..”
நீயும் படிச்சா மயக்கம் தெளிஞ்சுடுமே..”

என்று இடம்பெறும் வா¢கள் எப்பேற்பட்ட குடிகாரர்களின் மனதையும் கரைத்து குடியை நிறுத்த உதவுமென்று அடித்து கூறுகின்றார்

‘ஆந்திரஅழகி’ அஞ்சனா, ‘மலேசியாஅழகி’ ஸ்டெபி என இரண்டு கதாநாயகியுடன் அறிமுக நாயகன் சிலம்பரசன் நடிக்கும் “இன்னாருக்கு இன்னாரென்று” திரைப்படத்தை ‘ஏழுமலையான் மூவீஸ்’, ‘நாயகன் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனங்கள் சார்பில் எஸ். நாயகம் தயா¡¢க்கிறார். இசை – வசந்தமணி, ஒளிப்பதிவு – சாய் நட்ராஜ், பாடல்கள் – பிறைசூடன், இளையகம்பன், ஆண்டாள் ரமேஷ்! விரைவில் இசை வெளியீடு கண்டு திரைக்கு வர இருக்கிறது “இன்னாருக்கு இன்னாரென்று”