March 27, 2023

இன்ஜினியரிங் டிகிரியை போஸ்டல் வழியாக நடத்த சுப்ரீம் கோர்ட் தடை!

இன்ஜினீயரிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை அஞ்சல் வழி கல்வி மூலமாக நடத்தக்கூடாது என்று  சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

ஒடிசாவில் தொலை துாரக்கல்வி மூலம் தொழில்நுட்ப கல்வி படிக்கலாம் என்று ஒரு வழக்கில் ஒடிசா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள்,  இன்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை அஞ்சல் மூலமாக கற்றுத்தர கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்தனர்.  இது குறித்து ஒடிசா ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தனர்.

மேலும் இதே போன்ற வழக்கில் பஞ்சாப் – அரியானா மாநில ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது .இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் – அரியானா மாநில ஐகோர்ட், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரியில்  படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களும் சமம் அல்ல. இரு தரப்பினரையும்  சமமாக கருத முடியாது என  பிறப்பித்த உத்தரவு சரியே என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.