July 26, 2021

இனி வரும் வாரம் தேர்தல் வாரம்!

இன்னும் சில தினங்களில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் , இது குறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுத்து விட்டார்.
tn assem mar 1


நம்ம தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அநேகமாக இந்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகக் கூடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேதி அறிவித்தவுடனேயே, மாநிலத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்து விடும் என அவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி திங்கள்கிழமை அளித்த பேட்டியில், “வாக்கா ளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் அனைத்தையும் பதிவு செய்கிறோம். 51 தொகுதிகளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 652 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக தரப்பில் புகார் செய்யப்பட்டது. மேலும், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம்,அரவக்குறிச்சி, கரூர்,கிருஷ்ணராயபுரம்,குளித்தலை, மதுரை மத்தி ஆகிய 8 தொகுதிகளில் போலி வாக்காளர்கள் தொடர்பான பட்டியல் தி.மு.க. தரப்பில் தரப் பட்டுள்ளது. அதில் சுமார் 8 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த புகாரைப் பதிவு செய்துவிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிடம் அனுப்பி இருக்கிறோம். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், இனி வரும் புகார்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும். நீக்கப்பட்ட பெயர் விபரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். கடந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்ப்புக்காக 7 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவை வீடுவீடாகச் சென்று சரிபார்க்கப்படும். கல்லூரிகள் மூலம் 35 ஆயிரம் மாணவ-மாணவிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான படக் காட்சிகள் வெளிவரவுள்ளன. இந்தத் தேர்தலுக்கான அனைத்து ஓட்டு எந்திரங்களும் வந்துவிட்டன. 28 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்காம் மூலமாகவும், 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் விடியோ படப்பிடிப்பு மூலமாகவும் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படும். மொத்தமுள்ள 64ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளில் பாதியளவு வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக்குள் வந்துவிடும்”என்றார் ராஜேஷ் லக்கானி.