September 26, 2021

இனிமே இந்த டெலிமெடிசன்தான்!

.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப் பட்டு பிமாதமாக் செயல் பட்டுவருகிறது. ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம்தான் இச்சேவை வழங்கப்படுகிறது. எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர். குறிப்பிட்ட நோய் குறித்த தகவல்களை, முதலுதவி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை நோயாளியோ, உறவினரோ இந்த 104ல் தொடர்பு கொண்டு அறியலாம். சென்னையில் இதற்கென கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு, எந்நேரமும் தயாராக உள்ள சிறப்பு டாக்டர்களுக்கு இணைப்பு தருவர். இவர்களிடம் எந்த நோய் குறித்தும் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள், அலோபதியுடன், ஹோமியோபதி, சித்த மருத்துவ முறைகள் குறித்தும் கேட்டறியலாம் என்ற அரசின் அறிவிப்பை சமீபகாலமாக உபயோகிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
telemedines
இதனிடையே இனி இந்த டெலிமெடிசன்தான் உலகமெங்கும் முழுமையாக செயல்படப் போகிறது என்கிறார்கள். இது குறித்து மேலும் பல விவரங்களை திரட்டிய போது கிடைத்தவை:

இந்திய அளவில் 3,666 நரம்பியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 30 சதவிகிதம் பேர் பெருநகரங்களிலும், 30 சதவிகிதத்தினர் மாநிலங்களின் தலைநகரங்களிலும், 28 சதவிகிதம் பேர் வளர்ந்துவரும் நகரங்களிலும் இருக்கிறார்கள். சிறுநகரங்களில் வெறும் 3 சதவிகிதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். இது ஓர் உதாரணம்தான். இந்தப் பிரச்னையைத் தீர்க்க எதிர்காலத்தில் நமக்கு ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் தேவைப்படும்.

பெரிய மருத்துவமனைகள் இல்லாதபட்சத்தில் சிறப்பு மருத்துவர்கள் இருக்கவும் வாய்ப்பில்லை. காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டத் தலைநகரங்களிலேயே இதுதான் நிலைமை. சிறப்பு மருத்துவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்வது சிரமமானது. சில நேரங்களில் அங்கேயே தங்க வேண்டியிருக்கும். இந்நிலையில் இப்போதைய நவீன டெக்னாலஜியான டெலி மெடிசின் சிகிச்சையின் மூலம் இந்த சிரமங்கள் இல்லாமலேயே சிகிச்சை பெறமுடியும்.

நோயாளி எங்கே இருக்கிறாரோ அங்கேயே மருத்துவர் தொழில்நுட்ப உதவியுடன், கணிப்பொறியின் மூலம் செல்ல முடியும். இதற்கு ‘Virtual visit’ என்று பெயர். இந்த வீடியோ கான்ஃப்ரன்ஸ் சிகிச்சையைத்தான் ‘டெலி மெடிசின்’ என்கிறோம். இணையதள இணைப்புடன் லேப்டாப், கம்ப்யூட்டர் வசதி இருந்தால் போதும். ஸ்மார்ட் போன்கள் அதிகரித்திருப்பதால் டெலி மெடிசினின் சாத்தியம் இன்னும் அதிகமாகி இருக்கிறது. இதற்கான மென்பொருளில் நோயாளியைப் பற்றிய விவரங்களை மருத்துவர் பதிந்து வைத்துக் கொள்வார்.

எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளின் ரிப்போர்ட்களை மருத்துவருக்கு அனுப்புவதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது. மொபைல் போனில் படம் எடுத்தோ, ஸ்கேன் செய்தோ இணையத்தின் வழியாகவும் அனுப்பலாம். நேரில் பார்ப்பது போலவே, கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் மருத்துவரால் தெளிவாகப் பார்க்க முடியும். நேரடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கும் இந்த சிகிச்சைக்கும் அதிக வித்தியாசம் கிடையாது!

நரம்பியல் சிறப்பு மருத்துவர் கணபதி
.