September 24, 2021

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 14! ஈ எம் ஐ கட்டுவது இப்ப கொஞ்சம் ஈசி!

வசந்தகாலம் வந்திருச்சி – இன்ஸ்டால்மென்ட் கட்றவங்களுக்கு – இப்போதைக்கு இது குறைவுனாலும் ரூபாய் 8000 வரை குறையப்போகிறது திங்கட்க்கிழமை முதல். நாட்டின் தலையாய வங்கியான ரிஸர்வ் வங்கி ரெப்போ ரேட் எனப்படும் ஒரு கொள்கையை கொண்டே நீங்கள் வாங்கும் லோன் முதல் நாட்டின் பணவீக்கம் வரை கணக்கிடப்படுகிறது. வியாழக்கிழமை ஆர் பி ஐயின் ரெப்போ ரேட்ட்டில் 0.25 சதவிகிதம் குறைந்துள்ளது உண்மையிலே மக்களுக்குதான் அதிக லாபம்.
ravi jan 18
இதை நேற்றும் இன்றும் விடுமுறை என்பதால் நாளை -திங்கட்க்கிழமை முதல் பொது துறை வங்கிகள் குறைக்கின்றன. ஆனால் தனியார் வங்கிகள் வழக்கம் போல சாட்டையை சுழற்றும் வரை சுணக்கம் காட்டும். இதன் மூலம் உங்கள் வீடு / வாகனம் / தவனை முறையில் வாங்கின அத்தனை பொருட்களின் ஈ எம் ஐ கணிசமாக குறைவது மட்டுமில்லாமல் அடுத்த பிப்ரவரி 3 மற்றும் இரு குவார்ட்டர்களில் இந்த ரெப்போ ரேட் இன்னும் 0.50 முதல் 0.75 வரை குறையவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.

ஆட்டோ டெபிட் / ஈசிஎஸ் இந்த இரண்டு வகையில் உங்கள் பணம் உங்கள் வங்கியில் இருந்து சென்றால் உடனே செக் செய்யவும் – கண்டிப்பாக குறையனும் அப்படி இல்லயெனில் நீங்கள் வங்கிகளை தொடர்பு கொண்டு ரீஃபன்ட் வாங்கி கொள்ளலாம். போஸ்ட் டேட்டட் மூலம் இன்ஸ்டால்மென்ட் செலுத்துபவர்கள் தயவு செய்து ரீஃபன்ட் செக்கை அவர்களிடம் இருந்து வாங்கி கொள்ளவும்.

எனக்கு சின்ன வயசுல இருந்து கணக்கு பண்ண தெரியாது என்பதால் இந்த கணக்கியல் புலிகளிடம் இன்னும் அதிகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த 8000 ரூபாய் நான் கனித்திருப்பது ஒரு 50 லட்ச ரூபாய் வீட்டுக்கடனின் ஈ எம் ஐ ஆகும். பின்னங்குடி சுப்ரமணியம் போன்ற எக்ஸ்பர்ட்ஸ் எங்களுக்கு கொஞ்சம் எளிதாய் புரியும் வண்ணம் விளக்கினால் நல்லது.

Learn Something New – 22 Good News for people who pay their loans in EMI