October 18, 2021

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 22 – மாம்பழத்தில் ஆபத்து!

இந்த மாம்பழ சீஸனில் செய்றகை மற்றும் கார்பைட் மூலம் பழுக்கவைக்கபட்ட மாம்பழங்களை தவிர்ப்பதும் அதனால் வரும் ஆபத்தும் என்னவென்பதை அறிவோம்…… இயற்கையை விட்டு நாம மாறி எல்லாம் ஒரு அவசர உலகத்தில் பயணிக்கு நாம் பல நச்சு பொருட்களை நாமே விலை கொடுத்து வாங்கி அதற்க்கு பல லட்சம் செலவும் செய்யவும் தயங்கமாட்டோம்.
ravi 9
இப்போதய ஹாட் சீஸனுக்கு பெர்ஃபெக்ட் காம்பினேஷன் மாம்பழங்கள் தான். நமக்கும் அவசரம், நம்மிடம் விற்கும் வியாபரிகளுக்கு அவசரம் என்பதால் இப்பொது மிக மோசமான ஒரு ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கு உத்தியை பலர் கேள்வி பட்டிருப்போம் ஆனா அதை பற்றி முழுவதும் அறிந்துள்ளோமா என்றால் இல்லை என்பது தான் பதில். மாம்பழங்களை விற்க சரியான தருணம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14க்கு பிறகு தான் சந்தைக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். அதனால் இதற்கு முன் மாம்பழங்களை நீங்கள் தெரியத இடத்தில் வாங்கினால் அது செயற்க்கை மாம்பழங்கள் தான்.

ஆனாலும் இந்த மாம்பழ சீஸன் கோடை முடிவதற்குள் விற்க நினைக்கு வியாபாரிகள் இந்த மாம்பழங்களை கார்பைட் வைத்து பழுக்க வைப்பதால் பச்சை மாங்காய் 24 – 48 மணி நேரத்தில் மஞ்சள் மாம்பழமாக மாறுகிறது. இன்னும் பல வியாபாரிகள் இப்படி வித்தா அதிக காசு பண்ண முடியாது என இன்டஸ்ட்ரி கிரேட் கேல்சியம் கார்பைட்டை பயன்படுத்துகின்றனர்.

இவ்வகை மாம்பழங்களை நீங்கள் ஒரு சீஸனுக்கு ஒரு டஜன் உண்டாலே வருவது – அல்சர் மற்றூம் காஸ்ட்ரிக். இதை மூன்று முதல் நான்கு டஜன் வரை உண்கும் ஆட்களுக்கு கண்டிப்பாய் லிவர் (மொடாக்குடிகாரனுக்கு வரும் நோய் ரென்டே சீஸனில் வரும்). தோல் நோய் – சீழ் பிடிக்கும் வகை கட்டிகள் (வேணி கட்டி அல்ல – அது வெறும் ரத்த கட்டி) மற்றும் சூட்டு கட்டியும் அல்ல – இது சீழ் கட்டி மற்றூம் இதே மாதிரி 5 சீஸனில் சாப்பிட்டால் ரெண்டு கிட்னியும் பனால் மற்றும் 7 சீஸ்ன் இதே மாதிரி உட்கொண்டால் கண்டிப்பாய் ஹார்ட் அட்டாக்கும் உண்டு என்பதை எழுதி தருவேன்.

சிலர் நான் தான் நல்லா கழுவிட்டேனே என்று கூறினால் விஷயம் அது அல்ல – ஒரு கூடை மாம்பழத்தில் 27 கிராம் கிராபைட் பொடியை ஒரு சின்ன காகிதத்தில் மடித்து ஏதோ ஒரு மூலையில் வைத்து மூடினாலே போது அனைத்து மாம்பழங்களூம் நச்சு வாயந்தவை கார்பன் டிரேஸே இருக்காது. இப்போது எத்தனாலை அரசு சுகாதர துறையே அனுமதிப்பதால் நன்கு சூடான நீரில் கழுவி அதற்கு பிறகுஃபிரிட்ஜ்ஜில் வைத்தால் ஓரளவு பாதிப்பு குறைவு.

நீங்க சொல்றது எல்லாம் பார்த்தால் மாம்பழமே சாப்பிட முடியாதா என்றால் முடியும் இந்த பாயின்ட்களை மனதில் வைத்தால்

1. ஒரு இடத்தில் ஒரே மாதிரி மஞ்சளாக இருக்கும் மாம்பழங்கள தவிருங்கள் – ஏன் என்றால் ஒரே மாதிரி மஞ்சள் லாட் கண்டிப்பா கார்பைட் லாட் தான்.

2. அப்படியே தப்பி தவறி யாராவது உறவினர்கள் வாங்கி வந்திருந்தலும் அதை கழுவி வெட்டும் முன் தோலை கண்டிப்பாய் சீவ வேண்டும் சில அறிந்த பிறகு தோலை வெட்டுவார்கள் இது உள் மாம்பழ கூழையும் பாய்ஸன் ஆக்கும். ஒரு மாம்பழ துண்டை தோலோடு சாப்பிட்டு பாருங்கள் ஒரு மணி நேரத்தில் மாம்பழம் உடலுக்குள் கீழேயும் மேலேயும் ஜும்பா டேன்ஸ் ஆடி ஏன்டா இந்த மாம்பழம் இப்படி பாடாய் படுத்துதே என்று நினைக்க வைத்தால் அது எத்தனை கிலோ மேட்டர்னாலும் தூக்கி போடுவது நல்லது.

3. மாம்பழம் மஞ்சளா தானே இருக்கும் அப்புறம் எப்படினு கேட்டா – காம்பின் இடத்தை கவனியுங்கள் அதில் பால் வழிந்து இருந்தால் கார்பைட் கற்பழிப்பு என அறிக.

4. மஞ்சளில் அங்காங்கே பேட்ச் தென்பட்டால் கார்பைட் கைவண்ணம் என்பதையும் அறிக,

5. சிம்பிள் காமென் சென்ஸ் – வாசனை பிடிப்பது – நன்கு இயற்கையாய் கனிந்த மாங்கனிகள் மஞ்சள் நிறத்துக்கு மாற தேவையில்லை ஆனாலும் அந்த வாசனை லீக் ஆகும் அது நல்ல மாம்பழங்கள்.

6. கார்பைட் கல்லினால் மாம்பழம் வெயிட்டும் குறையாது அதனால் கல்லு மாதிரி எல்லா இடத்திலும் இருக்கும் பட்சத்தில் அதுவும் டுபாக்கூர் மாம்பழம். நன்கு பழுத்த பழங்கள் கனிவுடன் கையில் எடுத்தால் அந்த இடமே அமுங்கி போகும் அளவுக்கு கனிந்திருக்கும்.

7. எனக்கு ஜலதோஷம் மற்றும் முகர்வு சக்தி குறைவு அல்லது நன்கு இயற்கையாய் பழுத்த மாம்பழ கூலை நன்கு ஒரு கூடைக்குள் வைத்தால் அந்த வாசனை கார்பைட் மாம்பழங்களை பற்றி கொள்ளும் அபப்டி ஏமாந்தால் உள்ளே ஒருக்கும் மாம்பழ நார் மற்றும் கூழ் இள மஞ்சளாக இருந்தால் அது கண்டிப்பா கார்பைட் அட்ராசிட்டி தான்.

8. முடிந்தால் மாம்பழங்களை பச்சை நிற மாங்காய் வடிவத்தில் வாங்கி கொஞ்சமா வாங்குரவங்க அரிசி பானையிலும் நிறைய வாங்கிறவங்க சுடு தண்ணி பாய்லர்க்குள்ள வச்சி புகை பாச்சினா 5 நாள்ல பர்ஃபெக்ட் மாம்பழம் ரெடியாயிடும்

9. மாம்பழ வகைகள் பலது இருந்தாலும் அதிக ஃபிராடு நடப்பது பங்கனப்பள்ளி மாம்பழங்கள் தான். இந்த சின்ன சின்ன மாம்பழங்கள் மற்றும் சிவப்பு நிற நார் மாம்பழங்களை இவர்கள் இந்த கார்பைட் டெக்னாலஜிக்கு உட்படுத்துவது இல்லை.

10. தப்பி தவறி தவறான மாம்பழங்களை சாப்பிட்டு அன்று மூழுவது அசிடிட்டி அல்லது பேதி புடுங்கினால் அந்த சீஸன் முழுவதும் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் – வாயை கட்டவில்லை எனில் வயத்தை கிழிக்கும் அறுவை சிகிச்சை நிச்சயம்.

Learn Something New – 22 How to avoid artificially ripened and carbide based ripened mangoes