October 19, 2021

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 5

இந்த வாரம் ஒன்றை கற்போம் -வரிசையில் இப்போது- உங்கள் மொபைல் ஃபோன் / டேப்ளட் பேட்டரியை பாதுகாப்பது / இலவச பேட்டரி மீட்டர் சாஃப்ட்வேர் எப்படி?என்று பார்ப்போமா?சரியான ஜோடியை தேர்ந்தெடுககவிடில் வாழ்க்கை எப்படி சூனியம் ஆகுமோ அதே தான் பலரின் மொபைல் ஃபோன் வாழ்கை. எப்ப பார் சுகர் பேஷன்ட் மாதிரி சார்ஜரோடு திரிஞ்சிகிட்டு இருப்பாங்க. இது ஏன்? – முதல் முதல் ஃபோன் வாங்கின உடனே ஃபோனை ஃபிளைட் மோட் அல்லது ஆஃப் செஞ்சிட்டு தொடர்ந்து 6 மணி நேரம் மினிமம் சார்ஜ் பண்ணனும். அதுக்கு அடுத்து முதல் 15 – 30 நாட்கள் பேட்டரியை 80% உபயோகபடுத்தாம சார்ஜ் ஏற்றவே கூடாது. ஏன்னா அப்படி செஞ்சா பேட்டரியோட சைக்கிள் சரியா வேலை செய்யாம பேட்டரி அரை குறை சார்ஜ் தான் வாழ்க்கை முழுசா தரும்.
ravi charger feb 15
முதல் சார்ஜ் செய்யும் போது அந்த கவர் / ஸ்லீவ் லொட்டு லொசுக்கு எல்லா கருமத்தையும் கழட்டிடு சார்ஜ் பண்ணுங்க. அப்படி செய்யும் போது மிக மிக மெல்லிய உஷ்ணம் தான் வரனும், இதற்க்கு மாறா உஷ்ணம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்திச்சினா – உங்களுக்கு ஃபோன் வித்தவன் டுபக்கூர் பேட்டரியை கொடுத்திருக்கான் – அதனால் அவன் மூஞ்சிலே போய் போடுங்க இல்லைனா அவனை ஒரிஜினல் கம்பெனி சர்வீஸ் சென்ட்டருக்கு போவேன்னு சொன்னாலே மிரன்டு போய்டுவான். 75% இன்னைக்கு விக்கிற போன்கள் – இந்த தனியார் மொபைல் கம்பெனிகள் பேட்டரியை லவட்டி கொண்டு அதன் மூலம் டூப்ளிகேட் பேட்டரியை போட்டு உங்களுக்கு சில்வர் காயின் / கேரி பேக் / உருப்புடாத கிஃப்டெல்லாம் தரும் காரணம் ஒரிஜினல் பேட்டரி 20% விலைக்கு சமம். அதனால் தான் இந்த வெந்த வேகாத கடையில ஃபோன் வாங்காதீங்க. அவனுங்க உங்க முன்னாடி தான் அந்த பாக்ஸ் ஸ்டிக்கரை கிழிக்கிற மாதிரி செய்வாங்க ஆனா அந்த ஃபோன் வேண்டாம்னு சொன்ன பழைய மாதிரி ஒட்டிருவாங்க………..

இரண்டாவது பலர் இந்த கொத்து கொத்தா டுபாக்கூர் சார்ஜர் டிராஃபிக் சிக்னல்ல வாங்கி போடுவீங்க அது பெரிய நோ நோ – அடுத்து ஆம்னி பஸ் போர்ட் சார்ஜர் நோ நோ / அடுத்து ரயில்வே போர்ட் சார்ஜர் நோ நோ – இதெல்லாம் பெரிய பிரச்சினை ஆனாலும் இதை சமாளிக்க யூ எஸ் பி சார்ஜர் ஒகே – ஆனாலும் யூ எஸ் பி 5 வோல்ட் தான் இருந்தாலும் சில சார்ஜர் டக்குனு சார்ஜ் ஆகும் – சிலாது ஆகும் ஆனா ஆகாது. இதுக்கு காரணம் யூ எஸ் பி 1. வெர்ஷன் வெறும் .5மில்லி ஆம்ப்பியரை தான் தரும். யூ எஸ் பி 2 வெர்ஷன் .9 மில்லி ஆம்பியரையும் யு எஸ் பி 1.5 மில்லி ஆம்ப்பியரையும் தரும். இப்ப நல்ல கம்பெனிகள் காருக்கு சிகரட் லைட்டர்ல 1500 முதல் 3000 மில்லிஆம்பியர் வரை சார்ஜ் செய்யும் வண்ணம் கொன்டு வந்திருக்காங்க.

சூப்பர் சார்ஜர் – ஒரிஜினல் ஃபோனோடு வரும் சார்ஜர் இந்த ஃபோனுக்க்னு செஞ்சதால் கரெக்டா இருக்கும். அதே சார்ஜர் பின் ஆனால் என் ஃபோன் வேலை செய்யலைனு சொல்லாதீங்க ஒவ்வொரு பேட்டரியும் வித்தியாசம். கார் சார்ஜர் / லேப்டாப் சார்ஜர் / சேஃப் ஆனா டெஸ்க்டாப் சார்ஜர் டேஞ்சர். ஆன்ட்ராயிட்ல இதுக்கு ஒரு சாஃப்ட்வேர் இலவசமா இருக்கு(http://download.cnet.com/Energy-Bar/3000-2072_4-76084639.html) அதை டவுன்லோட் பண்ணினா 100 பர்சென்ட் பச்சை மற்றும் மஞ்சள்/ ஆரஞ்சு / மற்றும் 20 %க்கு கீழே சிவப்பு வர்ர மாதிரி ஆட்டோமேட்டிக்கா காட்டும் பார் டவுன்லோட் செஞ்சு கரெக்டான சார்ஜர் இருந்தா சூப்பர் பேட்டரி லைஃப்.

இந்த சார்ஜ் ஏத்தறது 20% கீழே போனா மட்டும் அது வரை சார்ஜ் பண்ணவே கூடாது. அதே மாதிரி 20% கீழே போனா தயவு செய்து கால்கள் பண்ணாதீங்க இது அணு உலைக்கு உள்ளே இருக்கு ரேடியேஷன் மாதிரி அம்பூட்டு டேஞ்சர். இது போக ஃபேஸ்புக் ஆப் ஆப்பிளோ அல்லது ஆன்ட்ராயிட்ல போட்டு யூஸ் பண்ணீனா பேட்டரி 8 மணி நேரம் கூட தாங்காது அதனால் அந்த ஆப்பை எடுத்திடுங்க – ஏன்னா பிரவுசர் முறையில யூஸ் பண்ணீனா லாங்க் லை 14 மணி நேரம் வரை வொர்க் அவுட் ஆகும்.

Let’s learn something -7- How to charge your phone safely / Download free battery meter software and more