September 18, 2021

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 25 நீங்கள் வாங்கும் காய் கனிகளில் உள்ள ஸ்டிக்கர் மற்றும் பார்கோட் மர்மம்!

காய்கறி பழங்களில் உள்ள பார்கோடை வைத்து அது என்ன மாதிரி என கண்டறிந்து வாங்க முடியும் அதனால் கடைக்காரரின் பேச்சை நம்பாமல் நீங்களே ஸ்பெஸலிஸ்ட் ஆக முடியும்…. இதோ நான்கு எழுத்துக்கள் 3 அல்லது 4 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பழங்கள் காய்கறிகள் – பூச்சிமருந்து தெளித்து ளர்க்கபட்டது…….உதாரணத்திர்க்கு – 3011/4011
ravi 7
8 என்ற எண்ணுடன் ஆரம்பிக்கும் சில லேபிள்கள் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அதை ஆர்கனிக் என கூறி அதிக விலையில் விற்பார்கள் ஆனால் உண்மையில் அது மரபணு மாற்றிய காய் மற்றும் பழங்கள்…….உதாரணத்திற்க்கு – 84011

9 என்ற எண்ணுடன் ஆரம்பித்து அதில் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அது தான் ஆர்கனிக் முறையில் பயிரிடபட்ட காய் பழங்கள் ஆகும்……..உதாரணத்திற்க்கு – 94011 – ஆனால் இந்த ஸ்டிக்கர் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை என்று நீங்கள் தான் கன்டறியவேண்டும்.

அனேக வாழை / ஆப்பிள் / கிவி / மாதுளை மற்றூம் சில பழங்களில் இதை பார்த்து வாங்கவும்,3/ 4011 என்னுடைய பழங்களில் மெழுகும் இருக்கும் கவனம் தேவை ஒட்டிய ஸ்டிக்கரின் கோந்து சாப்பிடும் ரகம் அதனால் பாதகமில்லை ஆனால் ஸ்டிக்கரை அவாய்ட் செய்ய வேண்டும் குழந்தைகள் அதை கவனிக்காமல் சாப்பிட்டால் பின் விளைவுகள் உண்டு –

அதே மாதிரி வாங்கும் போது ஸ்டிக்கரை எடுத்து பாருங்கள் நிறைய இடத்தில் ஸ்டிக்கரை எடுத்தால் நகம் கீறின மாதிரி தெரியும், இது கடைக்காரன் ஸ்டிக்கரை மாற்றியிருக்கிறான் என்று பொருள் – சில ஸ்டிக்கர் அர்த்தம் தெரியவில்லை எனில் இந்த கூகுள் / ஆப்பிள் இலவச‌ ஆப்ஸ் மூலம் உங்கள் மொபைல் ஃபோன் கேமரா மூலம் ஸ்கேன் செய்தால் உண்மை தெரியும் – ஸ்கேன்ல ரிஸல்ட் வரலைனா 100% டூப்ளிகேட் பயம்ங்க. இந்த ஸ்கேனரை வைத்து நீங்க வாங்க அல்லது வாங்க நினைக்கும் அத்தனை பொருட்களையும் ஸகேன் செய்து ஒரிஜினல் டுபாக்கூர் என கண்டறியலாம்.

பார்கோட் ஸ்கெனர் ஆப்பிள் – https://itunes.apple.com/us/app/scanlife-barcode-qr-reader/id285324287?mt=8

பார்கோட் ஸ்கேனர் கூகுள் – https://play.google.com/store/apps/details?id=com.google.zxing.client.android&hl=en

Let’s learn something – 25 Let’s understand the barcode meaning of Fruits and Vegetables along with barcode reading secret from your mobile –