September 23, 2021

இந்த பிரா விலை ஜஸ்ட் 61 கோடி ரூபாய்தான்!

அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நியூ யார்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது.இக் கண்காட்சியின் போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஃபான்டெஸி பிராக்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதில் இம்முறை ஒரு கோடி அமெரிக்க டாலர் (இந்திய பணத்திற்கு சுமார் 61 கோடி ரூபாய்) மதிப்புடைய பிரா விளம்பரப்படுத்த படுகிறது
31 - vanikam bra
மேலும் இந்த பிராக்களை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மாடல் அழகிகள் காத்திருப்பதுண்டு. அந்த வகையில் இம்முறை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கென்டிஸ் ஸ்வான்போல்(25) இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப் பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட வைரங்கள்,நீலக்கற்கள் மற்றும் 4200 இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பிரேஸிலைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரியா அம்ப்ரோஸியோ 25 லட்சம் டாலர் மதிப்புடைய பிராவை அணிந்து விளம்பரப்படுத்தினார்.

இம்முறை இந்த வாய்ப்பு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கென்டிஸ் ஸ்வான்போல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ‘எனது உடலுக்குப் பொருத்தமான அளவில் பிராவை தயாரிப்பதற்காக எனது உடலின் மாதிரி உருவமொன்றை அவர்கள் செய்தார்கள்.
அன்றிலிருந்தே,அவர்கள் பிராவை எப்படி செய்வார்கள்? அது எப்படி காட்சியளிக்கும்? என கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இவ்வ்ளவு விலையுயர்ந்த ஆடை ஆபரணம் எதையும் நான்அணிந்ததே கிடையாது.’ எனவும் அவர் கூறியுள்ளார்.

SA model wears $10million Victoria’s Secret bra
***************************************************************
It was lights, camera and serious security, as Candice Swanepoel shot the Victoria’s Secret Royal Fantasy Bra with two burly security guards standing watch.
The 25-year-old, who will wear the $10million bra and matching belt on the runway of the 2013 Victoria’s Secret Fashion Show, airing December 10, was also photographed in the jeweled bra for the lingerie giant’s Holiday catalog, in homes this week.