October 25, 2021

இந்த நூற்றாண்டு மாபெரும் குத்துச்சண்டை போட்டி; 1143 கோடி ரூபாய் பரிசு! வீடியோ

இந்த நூற்றாண்டின் பெரும் குத்துச்சண்டை என்று வர்ணிக்கப்பட்ட போட்டி, லாஸ் வேகஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் பிளாய்டு மேவெதர், பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ மோதினர். விறுவிறுப்பான போட்டியில் மேவெதர் ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக செயல்பட்ட மேவெதர், மொத்தம் 12 ரவுண்டுகள் முடிவில் 118–110, 116–112, 116–112 என வெற்றி பெற்றார்.
boxing may 3
இதன் மூலம், பட்டத்திற்கான ‘பெல்ட்டுடன்’ பரிசுத்தொகையாக ரூ. 1,143 கோடி வென்றார். மொத்தம் பங்கேற்ற 48 ‘வெல்டர் வெயிட்’ சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பட்டம் வென்று மேவெதர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார்.

வெற்றி குறித்து மேவெதர் கூறுகையில்,‘‘ உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி. தவிர, உலகம் முழுவதும் வந்து போட்டியை கண்டு ரசித்த ரசிகர்களுக்கும் நன்றி. பாக்குயாவோ கடுமையான சவால் தந்தார். இதனால்தான், இவர் இன்னும் குத்துச்சண்டை போட்டியின் உச்சத்தில் உள்ளார்,’’என்று குறிப்பிட்டார்.

வீடியோ ::