September 29, 2021

இந்த ஆடி சைக்கிளின் விலை ஜஸ்ட் ரூ.12 லட்சம் மட்டுமே!

“ஆடி ஸ்போர்ட் ரேஸிங் பைக்” என்றழைக்கப்படும் இந்த சைக்கிள், கார்பன் ரேஸிங் கைப்பிடி, இருக்கை, பாட்டில் வைத்து கொள்ளும் கூண்டில் போன்ற அனைத்தும் சேர்த்து இதன் மொத்த எடை வெறும் 5.8 Kgs தான்.சக்கரம் மற்றும் கைப்பிடி போன்றவையும் எடை குறைவான பொருளை கொண்டு செய்யப்பட்டுள்ளது.Dura Ace ப்ரேக், Dura Ace PD-9000 பெடல், Selle Italia SLR Kit Carbonio இருக்கை, Audi R8 Nappa லெதரால் செய்யப்பட்ட மேல் கவர் என இதன் ஒவ்வொரு அம்சமும் பிரமாதம்.
aadi cycle
கார்பன் ரேஸிங் சக்கரத்திற்கு பெயர் பெற்ற ‘லைட்வெயிட்’ என்னும் ஜெர்மன் கம்பெனியுடன் சேர்ந்து இந்த சைக்கிளை தயார் செய்திருக்கிறது ஆடி நிறுவனம். இந்த வண்டியின் பெர்பார்மன்ஸ் பற்றி எந்த தகவலும் இல்லை.

பொதுவாக ஸ்போர்ட்ஸ் கார்களில் காணப்படும் கார்பன் பைபர் கொண்டு இந்த சைக்கிள் தயாரிக்க பட்டிருப்பதால் இதன் வேகத்தில் ஒன்றும் குறைவிருக்காது.
சைக்கிள் ஆர்வலர்கள் இதை பார்த்த மாத்திரத்தில் இதன் பைகிங் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியும். இதன் விலை ரூ.12,70,000 ஆகும்.

வெறும் 50 சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்க பட்டிருப்பதால், இதை கோரிக்கையின் பேரில் மட்டுமே பெற்றுவாங்கி கொள்ள முடியும். கடந்த மார்ச் மார்ச் மாதம் “ஜெனீவா மோட்டார் ஷோ” வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள், கடந்த வாரம் முதல் டோக்யோவிலுள்ள ஷோரூமில் டிஸ்ப்ளே-க்காக வைக்க பட்டிருக்கிறது.