இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

எச்.ஏ.எல்., என்று சுருக்கமாக அறியப்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விமானங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 561 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: பிட்டரில் 279, டர்னரில் 32, மெஷினிஸ்டில் 30, கார்பென்டரில் 5, வெல்டரில் 14, எலக்ட்ரீசியனில் 85, மெக்கானிக்கல் 7, டிராப்ட்ஸ்மேனில் 7, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கில் 4, ஜெனரல் பெயிண்டரில் 12, பாசாவில் 75, ஷீட் மெட்டல் ஒர்க்கரில் 5, மெஷினிஸ்டில் 6ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பு என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க
www.apprenticeship.gov.in என்ற போர்டலுக்கு சென்று முதலில் விபரங்களை அறியவும். அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

கடைசி நாள்: 2019 மே 15.

விபரங்களுக்குஆந்தை ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு