September 29, 2021

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணி!

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: லோயர் டிவிசன் கிளார்க்கில் 14, மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 16 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் லோயர் டிவிஷன் பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள், நிமிடத்துக்கு 35 வார்த்தை ஆங்கிலத்தில் டைப்பிங் செய்ய வேண்டும். இத்தேர்வு கம்ப்யூட்டர் கீபோர்டு மூலம் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள் : 2, ஏப்., 2018

முகவரி : Air Officer Commanding,
Air Force Central Accounts Office,
Subroto Park, New Delhi-110010.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு