October 24, 2021

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) ஜாப் வேணுமா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட்டுகளையும் தயாரித்துவருகிறது. கடந்த வாரம் பி.எஸ்.எல்.வி. சி 37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலர்கள் என பல்வேறு நிலைகளில் அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில், இஸ்ரோ நிறுவனம் விஞ்ஞானி பதவியில் 87 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப உள்ளது.

isro feb 21

காலியிடங்கள்: எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 42, மெக்கானிக்கல் பிரிவில் 36, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 9 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பி.இ., பி.டெக். பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்பு அவசியம்.

வயது வரம்பு: 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற தகுதி: மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும், ஓ.பி.சி. பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வுசெய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மே மாதம் 7-ம் தேதி சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் 12 முக்கிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் தேதி: மார்ச் மாதம் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் (ஆந்தை வழிகாட்டி) விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம்: விஞ்ஞானி பணியில் சேருவோருக்கு சம்பளம் ரூ.56 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கும். சம்பளம் தவிர, பல்வேறு அலவன்சுகளும் உண்டு.

கூடுதல் விவரங்களை இஸ்ரோ இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.