September 20, 2021

இந்திய வம்சாவளி பெண் லண்டன் மேயரானார்!

கிரேட்டர் லண்டனில், ஈலிங் கவுன்சில் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுன்சிலர் ஹர்பஜன் கவுர் தீர் (வயது 62) என்ற பெண் மேயர் ஆகி இருக்கிறார். இங்கிலாந்தில் ஆசியா கண்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், மேயர் பதவியை எட்டிப்பிடித்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.இவர் ஈலிங் கவுன்சிலில் அமைந்துள்ள விக்டோரியா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று மேயர் பதவியை ஏற்றார்.
uk mayor
இது தொடர்பாக அவர்,”லண்டனில் ஈலிங் கவுன்சிலில் மேயர் ஆகி இருப்பது கவுரவம். சவாலானது. என் கணவர் ரஞ்சித் என்னுடன் இருந்தால், என்னால் எவரெஸ்டு சிகரத்திலும் ஏற முடியும் என்றார்.

ரஞ்சித் தீர், ஏற்கனவே ஈலிங் கவுன்சில் மேயர் பதவி வகித்துள்ளார்.இவர்களது பூர்வீகம், பஞ்சாப் மாநிலம் ஆகும். 1975-ம் ஆண்டு, இவர்கள் இங்கிலாந்தில் குடியேறினார்கள்.ஹர்பஜன் கவுர் தீர், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து சமூக அறிவியலில் பட்டம் பெற்றவர் என்பதும் இவர், இங்கிலாந்தில் தற்போதைய எதிர்க்கட்சியாக உள்ள தொழில் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. .