October 25, 2021

இந்திய ராணுவ ரகசிய சாகசம்…………..!

நிர்பாயை விரட்டிய ஜாகுவார் ஸ்ட்ரைக்கர் – அதிகாரபூர்வ இந்திய ராணுவ ரகசிய சாகசம்…………….17 அக்டோபர் அன்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிர்பாய் ஏவுகனை ஏவபட்டு வெற்றி பெற்றது என்று – இது தான் முதல் சப்ஸானிக் குரூஸ் ஏவுகனை……. இதை ஏவி இதன் பின்னால் சென்ற ஜாக்குவார் பற்றிய ருசிகர தொகுப்பு – ராணுவ விஷயங்கள் அதன் டெக்னாலஜியை பிடிக்காதவர்கள் இதை ஸ்கிப் செய்யலாம்…………..
ravi - nov 3  2a
டி ஆர் டி ஒ / இந்திய ராணூவம் (ஏர் ஃபோர்ஸ்) / இந்தியன் நேவி எல்லாம் பரபரப்பாக இருந்த நாள் அக்டோபர் 17. அன்று தான் அதி நவீன /அதி வேக சப்ஸானிக் குரூஸ் ஏவுகனை லான்ச் மட்டுமல்ல – அந்த ஏவுகனையை கிளப்பிய உடன் அதை விரட்டி அதன் டிராஜக்டரி மற்றும் அதன் பிகேவியரை கண்டு கொள்ளும் சேஸ் – ஹாலிவுட் படத்தை விட பெரிய மேட்டர். இதை லான்ச் செய்ய கலைகுன்டா ஏர் ஃபோர்ஸ் தளம் தயாராகிறது. கன்ட்ரோல் பேஸ் முதல் டி ஆர் டி ஓ கமான்ட் ஸ்டேஷன் மற்றூம் டெல்லி ஏர் ஃபோர்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் இந்தியன் நேவி என முப்படை மற்றும் இதன் மொத்த பிராஜக்ட் மூளை டி ஆர் டி ஓ – அதன் தலைவர் இன்னொரு தமிழர் – பெயர் – டாக்டர் தமிழ் மணி – டைரக்டர் ஜெனரல் . இந்த ஏவுகனையை விரட்ட முதலில் சுகோய் 30 தான் ஏற்பாடு செய்யபட்டு பின்பு அது வேலைக்கு ஆகாது என ஜாக்குவார் ஸ்ட்ரைக்கர் அம்பாலாவில் இருந்து வர வழைக்கபட்டது.

இரண்டு ஜாக்குவர் ஸ்ட்ரைக்கர் ரெடியாய் இருக்க ஏவுகணை பற்ற வைத்த வினாடி சீறி பறக்க அதை இந்த ஜாக்குவார் ஸ்டிரைக்கர் விரட்டி படம் எடுத்ததை நீங்கள் பார்க்கலாம். இதை செய்வது அவ்வளவு எளிதல்ல – அமெரிக்கா கூட இதில் அடி சறுக்கி விமானம் நொறுங்கி விழுந்த விஷயத்தை நம்மூர் மூளைக்காரர்கள் சபதமில்லாமல் இதை செய்ததை பாகிஸ்தான் ராணுவமே ஆச்சர்யத்துடன் இந்த விஷயத்தை பகிருந்து இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்…..

விவரமாய் இன்னொரு நாள் எழுதுகிறேன்……………வாழ்த்துக்கள் மற்றும் விவரத்தை பகிர்ந்தமைக்கு நன்றி – டாக்டர் – தமிழ் மணி – டி ஆர் டி ஓ.

சேஸிங் வீடியோ – http://tarmak007.blogspot.in/2014/10/tarmak007-exclusive-nirbhay-launch-video.html

பாகிஸ்தான் ராணுவ செய்தி –http://defence.pk/threads/sky-thriller-when-fighter-plane-jaguar-striker-chased-nirbhay-missile.342176/