September 20, 2021

இந்திய பெண் தூதர் தேவயானி ஆதர்ஷ் குடியிருப்பில் சட்டவிரோதமாக வீடு வாங்கினார்!

மும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் குடியிருப்பில் இந்திய துணை தூதர் தேவயானி சட்டவிரோதமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே மறுத்து உள்ளார். ஆதர்ஷ் குடியிருப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட வீட்டை சரியான விலை கொடுத்து தான் வாங்கினோம். இதனால் அந்த வீட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்கிறார்.
Edit Devayani us Document 22  2
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முன்னாள், இன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக வீடுகள் கட்ட மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டது. மும்பையின் முக்கிய பகுதியான கொலாபாவில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது.அதிலும் ‘1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்த குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும்’ என மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படாமல் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக 2010ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையில் ஏராளமான அரசியல் தலைவர்களுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பது உறுதியானது. எனினும் மாநில அரசின் குறுக்கீட்டால் சி.பி.ஐ., யாரையும் கைது செய்யவில்லை. இதையடுத்து சி.பி.ஐ.,யின் செயல்பாட்டை மும்பை ஐகோர்ட் வன்மையாகக் கண்டித்தது. ஹைகோர்ட்டின் கண்டனத்திற்கு கட்டுப்பாட்டு 2012ல் எட்டு பேர் மீது மடடும் சி.பி.ஐ., வழக்கு பதிந்து கைது செய்தது.

இதையடுத்து இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி, ஜே.ஏ.பாட்டீல் மற்றும் முன்னாள் மாநில தலைமைச் செயலர் பி.சுபர்ணியன் அடங்கிய இருநபர் குழுவை மாநில அரசு நியமித்தது. இந்த குழு நடத்திய விசாரணையில் பாலா திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

அதில்,”ஆதர்ஷ் குடியிருப்பு கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள 102 வீடுகளில் 25 வீடுகள் முறைகேடான வகையில் தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. மேலும் 22 வீடுகள் அரசியல்வாதிகள் ‘பினாமி’களின் பெயரில் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ள இடம் மாநில அரசுக்கு சொந்தமானது. அது ராணுவத்திற்கோ அல்லது மத்திய அரசுக்கோ சொந்தமானது அல்ல. முறைகேடான வகையில் ஒதுக்கப்பட்ட வீடுகள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் பினாமிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. மாநில முன்னாள் முதல்வர்கள் சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவான் மற்றும் தற்போதைய முதல்வர் பிருத்விராஜ் சவான் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது”என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Edit Devayani us 22 1
அத்துடன் இந்திய துணை தூதர் தேவயானி சட்டவிரோதமாக வீடு வாங்கி இருக்கும் தகவலும் இந்த விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே மறுத்து உள்ளார். ஆதர்ஷ் குடியிருப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட வீட்டை சரியான விலை கொடுத்து தான் வாங்கினோம். இதனால் அந்த வீட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்கிறார்.

Diplomat Devyani Khobragade ineligible for owning Adarsh flat: Panel

*****************************************************************
Devyani Khobragade, the Indian diplomat who is at the centre of a diplomatic row with the US, is one of the 25 allottees who have been found ineligible to own a flat in the controversial Adarsh Housing society by a judicial panel which probed the scam.