September 23, 2021

இந்திய தொழிலாளியை சகட்டுமேனிக்கு தாக்கும் மெக்கா என்ஜினியர்! – வீடியோ

இந்திய தொழிலாளர்கள் தங்களின் பணக் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில்தான் வெளி நாட்டிற்கு வேலைக்காக செல்கின்றனர்.ஆனால் அங்கு அவர்கள் படும் பாடு சென்ற பிறகு தான் தெரிகிறது.அண்மையில் கூட தமிழக தொழிலாளர்கள் சிலரை ஒட்டகம் மேய்க்க வைத்த செய்தி வெளியானது நினைவிருக்கும். இந்நிலையில் தற்போது இந்திய தொழிலாளி ஒருவரை மெக்கா வை சேர்ந்த ஒரு இன்ஜினியர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
mecca sep 21
அந்த வீடியோ காட்சியில் மெக்காவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் தான் நடத்தி வரும் கன்ஸ்ட் ரக்‌ஷன் நிறுவனத்தில் பணி புரியும் இந்திய தொழிலாளியை சரமாரியாக தாக்குகிறார். பின்னர் அவரைக் கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த பெல்ட்டால் அடித்து துவைத்து எடுக்கி றார். வலி தாங்க முடியாமல் கதறி அழும் இந்திய தொழிலாளி வெளியே செல்ல முயற்சிக்கிறார். மறுபடியும் அவரை இழுந்து வந்து சரமாரியாக தாக்குகிறார் அந்த மெக்காவை சேர்ந்த அந்த பொறியாளர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோ இதோ :