September 24, 2021

இந்திய துணைத்தூதர் அமெரிக்கா விசா மோசடியில் கைதாகி விடுதலை!

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி ( வயது 39 ). இவர் இந்திய தூதரகத்தில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பெண்கள் நலம் தொடர்பான துறையை கவனித்து வருகிறார். இவரது வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளார். இவருக்கு மிக குறைந்த சம்பளம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இந்த பணிப்பெண் அமெரிக்க போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தேவ்யானியை கைது செய்ய முடிவு செய்தனர். தேவ்யானி பள்ளியில் தனது குழந்தைகளை விட்டு விட்டு திரும்பி கொண்டிருந்தார். போலீசார் இவரை மறித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை பின்புறமாக கையை கட்டி, வீதியில் அழைத்து சென்றனர். பின்னர் இத்தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி துணைத் தூதர் தேவயானி விடுதலையானார்.
lady u s diplomat 2
அமெரிக்காவில் வேலைக்குரிய ஊதியம் வழங்காமல் குறைவான ஊதியம் வழங்குவது சட்டப்படி குற்றமாகும். தேவயானி தனது வீட்டில் வேலை செய்வதற்காக தேர்ந்தெடுத்த நபருக்கு விசா கேட்டு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தார். அதில் தவறான தகவல்களையும், முறைகேடான ஆவணங்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் நகரின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டினார்.இவ்வாறு தவறான ஆவணங்களை சமர்பித்த குற்றத்திற்காக தனது மகளை பள்ளியில் விட்டுச்செல்ல துணை தூதர் காரில் வந்தபோது பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரது கைது குறித்து அமெரிக்க அரசுக்கு இந்திய அரசு தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் தவறேதும் செய்யவில்லை என நீதிபதியிடம் கூறினார். அதை தொடர்ந்து நீதிபதி தனது தீர்ப்பில் 2.5 லட்சம் அமெரிக்க டாலரை பிணைத்தொகையாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.பின்னர் இத்தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி துணைத் தூதர் தேவயானி விடுதலையானார்.எனினும் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க சட்டத்தின்படி 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்று தெரிகிறது.

Women’s advocate, Indian diplomat paid housekeeper peanuts: Feds
**********************************************************
Devyani Khobragade, a diplomat to the US from India, allegedly promised to pay the female servant at least $9.75 an hour but then reneged, giving her an hourly wage of just more than $3. She’s been slapped with federal charges of making false statements and visa fraud.