October 18, 2021

இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா சாம்பியன்!

இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் (இந்தியா) சகநாட்டு வீராங்கனையான பி.வி. சிந்துவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சாய்னா தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தி சிந்துவை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
jan 26 - saina_nehwal
இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால்- பி.வி. சிந்து பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இவர்கள் இருவரும் பேட்மிண்டன் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறையாகும். இதனால் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.இதில் சாய்னா 21-14, 21- 17 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த 12 மாதங்களுக்குப்பிறகு சாய்னா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.