October 19, 2021

இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நீக்கம்- சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விதிப்படி இந்திய ஒலிம்பிக் சங்கம் தேர்தல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு விதிக்கப்பட்ருந்த தடையை, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது நீக்குவதாக அறிவித்துள்ளது. தடை நீக்கப்பட்டதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
IOA olympic-Sports
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல், ஒலிம்பிக் சாசனப்படி நடக்கவில்லை. அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஓ.சி.) விதிமுறை அதில் கடைபிடிக்கப்படவில்லை. ஊழல் புகாரில் சிக்கிய அபய் சிங் சவுதாலா, லலித் பனோட் உள்ளிட்டோர் நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதனை ஏற்க மறுத்த ஐ.ஓ.சி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை 2012-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஐ.ஓ.சி.யின் புதிய சட்ட விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் படி தேர்தல் நடந்தது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார்.தமிழகத்தை சேர்ந்த 65 வயதான என்.ராமச்சந்திரன் உலக ஸ்குவாஷ் சம்மேளன தலைவராகவும் இருக்கிறார். இவரது இளைய சகோதரர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் ஆவார்.

இப்படி ஒலிம்பிக் சாசனப்படி தேர்தல் நடத்தப்பட்டதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நீக்கியுள்ளது.தற்போது தடை நீக்கப்பட்டதால், தற்போது, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் பங்கேற்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்க்து.

IOC lift ban on Indian Olympic Association after 14 month suspension for corruption
**************************************************************************************************
The International Olympic Committee announced on Tuesday it has lifted a 14-month suspension imposed on the Indian Olympic Association – the first time such a sanction has been removed during a Games.