October 18, 2021

இந்திய் விவசாய பணிகளில் 80% பெண்களே!

அண்மை17 - women-in-agriculture-india காலமாக் இந்தியாவில் விவசாயம் தொடர்பான பணிகளில் 80% பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். நாட்டில், சுமார் 17 கோடி பெண்கள் விவசாயம் மற்றும் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 60 முதல் 80 சதவீதம் வரையில் தானிய உற்பத்தி பணியில் அவர்களின் பங்களிப்பு உள்ளது. இதேபோல், பால் பொருள்கள் உற்பத்தியில் 90 சதவீதம் பங்களிப்பு உள்ளது. ஆனால், 13 சதவீதம் பெண்கள் தான் நில உரிமையாளர்களாக உள்ளனர் என்று ஆக்ஸ்பேர்ம் இந்தியா தெரிவித்துள்ளது.

உலக உணவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, அரசு சாரா தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பேர்ம் இந்தியா வெளியிட்ட செய்தியில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் சாகுபடி பருவத்தில் பெண்கள் சுமார் 3,300 மணி நேரம் பணியாற்றுகின்றனர். அதேநேரத்தில் ஆண்கள் 1,860 மணி நேரம் தான் பணிபுரிகின்றனர். ஆனால், வெளி உலகில் ஆண்கள்தான் விவசாயி, தொழிலாளி, உழைப்பாளி என்று போற்றப்படுகின்றனர். இது ஏன் என்றால், விவசாய பணியின் அடிப்படையில் அந்த அந்தஸ்து அவருக்கு கிடைக்கவில்லை. நிலத்தின் உரிமை யாளர் என்ற உரிமையின் அடிப்படையில் தான் கிடைக்கிறது.

கிராமங்களில் உள்ள பெண்களுக்கு நிலம் சொந்தமாக இல்லை. இதனால், அவர்களுக்கு வங்கிகள் விவசாயக் கடன் எதையும் வழங்குவது இல்லை. இதுதவிர வேறு சமூக சலுகைகளும் கிடைப்பதில்லை. விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வறுமையால் பெண் விவசாயி தற்கொலை செய்து கொண் டால், அவருக்கு எந்த இழப்பீடும் கிடைப்பது இல்லை. காரணம் நிலம் எதுவும் அவரது பெயரில் இல்லாததுதான் என்று தெரிய வருகிறது.

Women do 80% of farm work, own only 13% land: Oxfam
**********************************************************
They till the land, sow, harvest and milk the cows to bring food on our tables but a majority of close to 80 per cent women engaged in farm-related activities in India have no land rights.About 17 crore women work in agriculture and allied activities, producing about 60-80 per cent of our food and 90 per cent of dairy products but only 13 per cent have property rights, says a factsheet brought out by Oxfam India, on the occasion of World Food Day on Wednesday.