October 21, 2021

இந்தியா வம்சாவளியான பத்மஸ்ரீ வாரியர் சீன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி

இந்தியா வம்சாவளியை சேர்ந்த பத்மஸ்ரீ வாரியர் சீன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
maju warior
ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் பிறந்த இவர், டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கும், கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலை கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்துள்ளார்.பத்மஸ்ரீ வாரியர் தற்போது அமெரிக்காவில் மின்சார கார் தயாரிக்கும் ‘நெக்ஸ்ட் இவி’ என்னும் சீன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர் பத்மஸ்ரீ வாரியர். அமெரிக்காவில் சிலிக்கான் வேலியில் பிரசித்தி பெற்ற ஐ.டி. நிறுவனமான சிஸ்கோவில் தலைமை தொழில் நுட்ப அதிகாரியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.