September 27, 2021

இந்தியாவை பெருமைபடுத்திய இன்சாட் – 3 – கோமாவுக்கு சென்றது!

இந்திய தொலைக்காட்சி பெரிய அளவுக்கு சென்றதின் முக்கிய காரணம் இன்ஸாட் 3 ஈ வகை சாட்டிலைட் தான். அது வரை தாய்காம் / மியாஸாட் / ரஷ்ஷாட் / இம்மர்சாட் / என் எஸ் எஸ் / அர் ஆர் சேட் என பல சேட்டிலைட்கள் தான் இந்தியாவின் சேனலை தாங்கி நின்றன. இதன் மூலம் அதிகம் அந்நியச்செலவாணி வேறு வீணாயிற்றூ. அது போக இதன் அப்லோடிங் பாயின்ட்கள் அவுட்சைடு இந்தியாவில் இருந்த நேரத்தில் சன் டிவியில் இருந்து – ஜெயா டிவி வரை அத்தனை சேனல்களில் ஹாட் பாயின்ட்டாக இருந்தது தான் இந்த இன்சாட் 3ஈ. இது 2003 ஆண்டு ஏவபட்ட சேட்டிலைட். இதில் 24 சி பேன்டு / 12 எக்ஸடன்ட் சி பேன்ட் டிரான்ஸ்பான்டர்களை கொண்ட ஒரு அற்புத சாட்டிலைட். ஒரு சேனலுக்கான எஸ் சி பி சி விலை அந்த காலத்தில் 6 – 8 லட்சமாக இருந்த போது 3 லட்சத்துக்கும் கீழே கொண்டு வந்த அற்புத சேட்டிலைட் இன்னும் 4.5 வ்ருஷம் சர்வீஸ் பாக்கியிருந்தாலும் 29 மார்ச் கோமா நிலைக்கு போய் வேலை செய்வதை நிறுத்தியது.
ravi - apr 3
இது ஆக்ஸிடைஸர் என்னும் ஒரு திரவ பொருள் சேட்டிலைட் தினமும் பூமி சுற்றுவதால் ஒவ்வொரு நாளும் ஹசனில் இருந்து இதை இந்தியாவுக்கு நேராக நிலை நிறுத்தும் ஒரு பணியை செய்ய முடியாமல் போனது தான் காரணம். இதனால் இந்த சேட்டிலைட் அதன் 55 டிகிரி கிழக்கில் நிலை நிறுத்த முடியாததால் இந்த சாட்டிலைடுக்கு வி அர் எஸ் என்னு விருப்ப ஓய்வு அளிக்கபட்டு இதன் பணியை ஏற்கனவே இந்த மாதிரி நடக்கும் என எண்ணி ஜிஸாட் 16க்கு மாற்றி விடப்பட்டாலும் – IRNSS-1B ஏப்ரல் 4 அன்று ஏவப்படுகிறது.

இது இரண்டாவது பெரிய 7 ரீஜனல் நேவிகேஷனல் சாட்டிலைட் ஆகும். இதன் மூலம் 189 டிரான்ஸ்பான்டர்கள் அதில் 91 அண்ணிய நாடு சேனல்கள் மற்றூம் அதர் உபயோகத்திர்க்கு லீஸ் செய்யபட்டு இப்போது நமக்கு அண்ணீய செலவானி வரும் வகையில் அமைக்கபடுகிறது. இந்தியால நிறைய பேருக்கு சோறே இல்லை இதுல இது தேவையானு கேக்குற அறிவாளிகளுக்கு ஏன் நீங்க தான் தினமும் ஒரு நாள் பட்டினியா இருங்கலேன் என்று பதிலுடன்…………….இன்ஸாட் – 3 பிராஜக்ட்டுக்கு பணி புரிந்த வகையில் – Rest in Peace-

RIP to Insat 3E – The satellite which created REVOLUTION in Indian Sat TV Scenario