October 19, 2021

இந்தியாவுக்கு வர்ரீங்களா? அப்ப இதயத்தைக் கழற்றி வைத்து விட்டு வாருங்கள்!

இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இணையர்கள் டில்லியில் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வைக் கண்டு தற்கொலை செய்து கொண்டனர்.இங்கிலாந்து புதுமண இணையர். பிரிட்டனைச் சேர்ந்த கேபல்ஜேம்ஸ் மற்றும் அலக்ஸ் சான்டரா காஸ்கல் இருவரும் புதுமண இணையர்கள் இவர்கள் தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வருகை தந்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த இவர்கள் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓர் அய்ந்து நட்சத்திர விடுதி யில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
british couple suicide
இவர்களின் தற்கொலை குறித்து அய்ந்து நட்சத்திர விடுதியினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில் இருந்த கெபல் ஜேம்ஸின் தந்தை இங்கி லாந்து இதழ் ஒன்றிற்கு பேட்டியளித் துள்ளார். அப்பேட்டியில் அவர்,”எனது மகன் கேபல் தன்னுடன் பணிபுரியும் அலக்ஸ்சை காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டான். இருவரும் தேனிநிலவு கொண்டாட இந்தியா செல்ல வேண்டும் என்று விரும்பினர். இதனை அடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனைத்து ஏற்பாடு களும் செய்து கொடுத்தேன்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அவர்கள் எனக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள் அதில் கெபல் இந்தியாவில், தான், பரவலாகப் பார்த்த சமூக ஏற்றத்தாழ்வு குறித்து மனவருத்தத்தை அடிக்கடி குறிப்பிடுவார். நாங்கள் கேள்விப்பட்ட இந்தியா வாக இது இல்லை, இங்கு மனிதர்களிடையே பேதங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு ஏழைகளுக்கு சரியான மருத்துவம் கொடுப்பதில்லை அதே நேரத்தில் பணக்காரர்களுக்குத் தரமான சிகிச்சைவழங்க பல்வேறு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன, இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை,

பணத்திற்கும் ஜாதியச் சமூகத்திற்கும் மட்டுமே மதிப்பு உள்ளது என்று அடிக்கடி கூறுவார்.

நானும் அவர்களுக்கு அந்த நாட்டில் நிலவும் சமூகச் சிக்கல்கள் குறித்து விளக்கி வந்தேன். அலக்ஸ் சான்டரா காஸ் கல்வும் அவர்களது நண்பர் களிடம் இந்தியாவில் நிலவும் ஏழை -_ பணக்கார வேறுபாடு குறித்து பேசியிருக்கிறார். இருவருமே மிகவும் அதிக இரக்க குணமுள்ளவர்கள். இங்கிலாந்தில் இருக்கும் போது பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவை செய்து வந்தனர்.அவர்களுக்கு பிறர்படும் துன்பம் வேதனையை அளித்தது. அவர்களின் அதீத இரக்க குணமும் இந்தியாவில் நிலவும் சமூகக் கொடுமை களும் அவர்களை தற்கொலைசெய்ய காரணமாகி விட்டன என்று கூறினார்.

கெபல் தற்கொலை செய்யும் முன்பு தனது டுவீட்டர் வலைதளத்தில் “இந்தியா வர விரும்பி னால் இதயத்தை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் இங்கு மனித ஏற்றத் தாழ்வுகள் அதிகம் அதை சகித்துக்கொள்ள நல்ல மனிதர்களால் இயலாது” என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page3/90344.html#ixzz3IFg0Z3lW