March 22, 2023

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான உறவு அவசியம் – கோத்தபய பேட்டி!

ராஜபக்சே பிரதர் அதிபரானவுடன் இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கை நிலை மோசமாகும் என்று பலரும் கணித்திருந்த படி இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தம் படி தமிழர் களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வாய்ப்பு இனிமேல் இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச கூறினார். ஏனென்றால் இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள சிங்களர் கள் இந்த அதிகாரப்பகிர்வை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச, தமிழகத்தில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழான இந்து நாளேட்டுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப் படி தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்ப தற்கான வாய்ப்பு இனிமேல் இல்லை என்று அதிபர் கோத்தபயா கூறினார். ஏனென்றால் இலங்கை யில் பெரும்பான்மையாக உள்ள சிங்களர்கள் இந்த அதிகாரப்பகிர்வை விரும்பவில்லை. அதனால் தமிழர்களின் பகுதிகளில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை சிங்களர் யாரும் குறை கூறுவதில்லை. ஆனால் கூடுதல் அதிகாரம் பகிர்வு என்றால் அது அரசியல் பிரச்சனையாக மாறிவிடுகிறது என்று கோத்தபயா குறிப்பிட்டார்.

தமிழர்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் வாழும் பகுதிகளுக்கான உரிமைகள் குறித்து கேட்ட போது தமிழர்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் கூட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என அரசு கருதுகிறது. அரசியல் பிரச்சினைகள் குறித்து கூடுதல் கவனம் தேவை இல்லை என்றும் அரசு கருதுகிறது. முந்தைய அரசு அதிகாரப்பகிர்வு அதிகாரப் பகிர்வு என்று திரும்பத் திரும்ப அதற்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து விவாதித்தது. அதனால் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பதிமூன்றாவது இலங்கை அரசியல் சாசன திருத்தப் படி இப்பொழுது மாற்றங்களை செய்ய முடியாது. ஏனென்றால் பெரும்பான்மையினராக உள்ள சிங்களவர் விருப்பமும் உணர்வுகளும் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக உள்ளது. அதே நேரத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வளர்ச்சி வேண்டாம் என்று சிங்களர் யாரும் சொல்வதில்லை, தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை, ஆனால் அரசியல் பிரச்சனைகளை பொருத்தமட்டில் வித்தியாச மான நிலை தோன்றுகிறது என்றும் விளக்கமளித்தார்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 19 ஆவது திருத்த படி அதிகார மாற்றம் குறித்து விவாதிக்கலாம். ஆனால் இந்த 19-ஆவது அரசியல் சாசனத் திருத்தம் ஏற்கனவே தோல்வியடைந்துவிட்டது அதனை ரத்து செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் கோத்தபயா குறிப்பிட்டார்.

ஆனாலும் இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய விஷயங்களில் இந்திய அரசுடன் நெருக்கமாக ஒத்துழைக்க இலங்கை விரும்புகிறது.கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தாக்குதல்கள் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வை என்பது தெளிவாகியுள்ளது. எனவே தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக இலங்கை நம்புகிறது.

அதே நேரத்தில் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை குறைப்பதற்கு கடந்த சிறிசேனா அரசு மேற்கொண்ட முயற்சிகளை வாபஸ் பெற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கோத்தபயா கூறினார்.

புது டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே கடந்த காலத்தில் சரியான புரிந்துணர்வு இல்லை. அத்தகைய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக நான் வெளிப்படையாகவும் திறந்த மனதோடும் செயல்பட தீர்மானித்திருக்கிறேன். சீன முதலீட்டுக்கு மாற்று ஏற்பாடு ஒன்றை இந்தியாவும் இப்பகுதியைச் சேர்ந்த மற்ற நாடுகளும் கண்டுபிடித்தாக வேண்டும். குறிப்பாக அவை இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான உறவு அவசியம். இந்தியாவைப் பொருத்த மட்டில் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இலங்கையின் உறவுகள் எப்படி உள்ளது என்பது முக்கிய பிரச்சனைகளாக உள்ளது. இந்தியாவின் மனதில், இந்திய அதிகாரிகள் அல்லது இந்திய தலைவர் களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும்படி இலங்கை நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு இலங்கை நடந்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது என கோத்தபய தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடர்ச்சியான வலுவான உறவு அவசியம். இலங்கையில் எந்தெந்த திட்டங்களில் இந்தியா முதலீடு செய்ய விரும்புகிறது. அந்த திட்டங்கள் லாபகரமாக அமையுமா? இல்லை நஷ்டமடையுமா? இது குறித்து இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி இந்தியா முடிவு செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த பொழுது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கை துறைமுக அபிவிருத்தி, இலங்கையில் பெட்ரோல் டீசல் விநியோகம் தொடர்பான திட்டங்களை மேற்கொள்ள இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்கள் குறித்தும் மறுபரிசீலனை செய்ய இலங்கை விரும்புகிறது.,

கடந்த நவம்பர் 29ஆம் தேதி இந்தியாவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் வளர்ச்சித் திட்டங்களுக்காக 40 கோடி டாலர் வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த உதவிக்கான திட்டங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை விரும்புகிறது. அதனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அரசு தன்னுடைய முதல் விருந்தாளியாக இலங்கைக்கு அழைத்துள்ளது. அவர் இலங்கைக்கு வரும் பொழுது அவருடன் உதவித் திட்டங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று நம்புகிறேன்.என்று இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச தெரிவித்தார்.