September 25, 2021

இந்தியாவில் பிறந்துவிட்டோம் என வெட்கம்! – சர்ச்சையைக் கிளப்பிய மோடி பேச்சு!

வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சீனாவுக்கும் தென் கொரியாவுக்கு சென்றார். அங்கு அவர் பேசும்போது, “முன்பெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களைத்தான் நான் பார்த்தேன். கடந்த ஓராண்டாக, இந்தியர்களாக தங்களை பெருமிதத்துடன் பார்க்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை நான் செல்லும் வெளிநாடுகளில் பார்க்கிறேன்” என்று தனது ஆட்சியைக் குறிப்பிட்டு பேசினார்.
modi various
பிரதமரின் இந்தப் பேச்சு, இந்தியர்களை அவமதிக்கும் விதத்தில் உள்ளது என சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான பதிவுகள் வந்த வண்ணமிருக்கின்றன. லட்சத்துக்கும் அதிகமான டுவிட்டுகள் உலகம் முழுவதும் ‪#‎ModiInsultsIndia‬ என்ற டேக்கில் ட்ரென்டிங் அனல் பறந்துகொண்டுள்ளன. லட்சம்பேர் இவற்றை பார்த்திருப்பதாகவும் அதிக நேரம் நீடித்த ட்ரென்டிங் என பிபிசி உட் பல சர்வதேச ஊடகங்கள் இதனை குறிப்பிட்டுள்ளன.

அவற்றிலிருந்து சில கருத்துக்கள்:

janakiraman ‏@periyakulam – காக்கையால் குயில் போல பாட முடியாது. தவறான சிந்தனை கொண்டவரால் இனிமையான வார்த்தைகளை பேச முடியாது.

कोमल 🙂 ‏@Komal_Indian – பிரதமர் பதவிக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால் சுய துதிபாடல் பாடும் ஒருவரால் நாட்டுக்கு எந்த பெருமையும் இல்லை. மன்னியுங்கள் மோடி.

Jothimani ‏@jothims – ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்து இந்தியாவை காப்பாற்றினார்கள். இந்தியா என்பது பல கோடி மக்கள் மற்றும் மிகச் சிறந்த தலைவர்களின் உழைப்பு மற்றும் கனவினால் உருவானது. நீங்கள் எங்களை அவமதிக்காதீர்கள்.

नवेन्दु ‏@NavenduSingh_ – இந்தியனாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். வருத்தம் என்னவென்றால் நாட்டின் 31% மக்கள் உங்களை பிரதமராக தேர்வு செய்ததுதான்.

Arun Nambiar ‏@aruns_nambiar – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜியார்ஜ் புஷ், இத்தாலி நாட்டின் பெர்லுஸ்கோனி ஆகியோர் தங்களது நாட்டு மக்களை அவமதித்தது போலதான் இதுவும். நாங்கள் இதையும் கடந்து வருவோம்.

FreedomFighterz ‏@PuliArason – டியர் @narendramodi உங்களுக்கு உலகம் முழுவதும் சுற்ற வேண்டுமென்றால் சுற்றுங்கள். உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள். நிறைய பேசுங்கள். ஆனால் எங்களை அவமதிக்காதீர்கள்.

WithRG ‏@withRG – ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்தாலும் வியர்வை துளியாலும் ஆனது தான் இந்தியா. வெளிநாட்டுக்கு சென்ற பிரதமர் இப்படி பேசி இருப்பது வருத்தமளிக்கிறது.