July 26, 2021

இந்தியாவில் பள்ளி குழந்தைகளில் 13 சதவீதத்திற்கு கிட்டப்பார்வை!

முன்னொருக் காலத்தில் முதியோர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த பார்வை குறைபாடு, தற்போது அதிகளவில் இளைஞர்களை பாதித்து வருகிறது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் தற்போது 5 கோடி பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது. மேலும் இன்றைய பள்ளி குழந்தைகளின் வாழ்க்கை சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றத்தால் பார்வை குறைபாடு அதிகரித்து வருகிறது. இதை புரிந்து கொள்ள பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
eye mar 13


தற்போதைய நிலையில் ஒவ்வொரு நாளும் கண் சார்ந்த விபத்துகள், தொற்று நோய்க்கிருமிகள்,ஊட்டச் சத்துக் குறைவு, பிறவியிலேயோ, பரம்பரையாகவோ அல்லது முறையற்ற கண் பராமரிப்பு, வேறு ஏதாவது நோய்க் கிருமி கள் போன்ற பல்வேறு காரணங்களால் பார்வையிழப்பு என்னும் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளும் ஏரா ளம்.தங்களுக்கு கண்ணில் குறைபாடு இருக்கிறது என்பதை அவர்களாகவே புரிந்து கொள்ள முடியாது.கண்ணில் குறைபாடு உள்ள குழந்தைகள் அந்தக் குறைகளுடனேயே தமது வேலைகளை, குறிப்பாக படிப்பது, விளையாடு வது, போன்ற வேலைகளை ‘இது தான் இயல்பான பார்வை’என்ற எண்ணத்துடன் செய்கின்றனர்.தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க மிகவும் சிரமடைவார்கள் தான் அதிகம். இதுதான் கிட்டப்பார்வை என்று சொல்லக் கூடிய மையோப்பியா பார்வை குறைபாடு. இதனால் மாணவர்களுக்கு கவன குறைவு, கவன சிதைவு போன்றவை ஏற்பட்டு படிப்பில் நாட்டமில்லாமலும், ஆா்வமில்லாமலும் போகிறது. இதனை தடுக்க மாணவர்களின் பார்வை எல்லையை விரி வடையச் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ராஜேந்திர பிரசாத் கண் சிகிக்சை அறிவியல் மையம் மேற்கொண்ட ஆய்வில், “இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளில் 13 சதவீதத்திற்கும் அதிகமா னோர் கிட்டப்பார்வை குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 7 சதவீதமாக இருந்த இக்குறைபாடுள்ள குழந்தைகளின் வீதம், தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது.இதற்கு, விடியோ கேம்கள், செல்லிடப்பேசிகள், டேப்ளட்டுகள், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் அதிகமான பயன்பாடே காரண மாகும்.

கிட்டப்பார்வைக் குறைபாட்டை நுட்பமாகக் கூறுவதானால், விழிக்குள் ஊடுருவம் ஒளியானது நேரடியாக விழித் திரையில் (ரெட்டினா) படாமல் அதற்கு முன்பாக விழுவதாகும்.இதன்படி, இக்குறைபாடு உடையவர்கள் தூரத்தில் இருக்கும் பொருள்களைக் காணும்போது அது அவர்களுக்கு தெளிவாகத் தெரிவதில்லை. மாறாக, அருகில் இருக்கும் பொருள் நன்றாக தெரியும். இந்தியாவில் கண் பிரச்னைகள் தொடர்பாக குறைவான அளவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும், கிட்டப்பார்வை குறித்தும் மிகவும் அரிதாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்னைகள் தொடர்பாக தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.அதில், வயது ரீதியான தசைச் சிதைவுகளுக்கு ஸ்டெம் செல்களை பயன்படுத்துவது, உலக வெப்பமயமாதல் மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சு போன்றவற்றால் கண் பார்வையில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம் என்று எய்ம்ஸ் தலைஅவர்அதுல் குமார் கூறினார்.

மேலும் ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும், மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக் குறைபாடுதான். பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது. பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.

அரிசி, கோதுமை, முளைகட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது. கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு அதிகரிப்பு மாறி வரும் வாழ்க்கை சூழல்பாதிப்பை தடுக்க படிக்கும் அறைகளில் நல்ல வெளிச்சம் அவசியம். கண்கள் கூசும் அளவிற்கு வெளிச்சம் இருக்கக்கூடாது.

தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் படிக்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் விளையாடும் பொழுதும் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்சோர்வு அடைவதைத் தவிர்க்கலாம். தினமும் சிறிதுநேரம் குழந்தைகள் வெளியில் சென்று விளையாட வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூர்மையான குச்சி, பேனா போன்ற பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடவோ, ஓடவோ கூடாது. கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகள் பிளாஸ்டிக் லென்ஸ் அணிவது நல்லது.