September 25, 2021

இந்தியாவில் கூகுள் வழங்கும் இணையசேவை!

ஃபேஸ்புக் லைட் என்னும் இலகுவகை ஃபேஸ்புக் ஆரம்பிச்ச உடனே அடுத்து கூகுள் தன் இலகுவகை இணைய சேவையை ஆரம்பித்துள்ளது இந்தியாவில். இந்தியாவின் மொபைல் பாப்புலேஷன் எனப்படும் மொபைல் உபயோகிப்பாளர்கள் வளர்ந்து கொண்டே போவதை அனேக நாடுகள் கண் கொட்டாமல் இதன் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்ப்பது மட்டுமில்லாமல் எப்படி எல்லாம் இதை வைத்து தான் வணிகம் செய்து காசு பார்க்க முடியும் என இந்தியாவில் தன் வர்த்தகத்தை அமெரிக்கவை விட பெரிதாக செய்யும் பல கம்பெனிகளின் நடுவே கூகுளும் ஒன்று.
1002373_1035899426428452_8611609424000073999_n
ஹைதராபாத்தில் பல ஆயிரக்கணக்கான பணியாளர்களை அமர்த்தி தன் கடையை திறந்து இந்திய மொபைல் சந்தாக்காரர்களை ஆராய்ச்சி செய்த வகையில் இரண்டு குறைபாடுகளை கன்டறிந்தனர். ஒன்று மெட்ரோ சிட்டிகளை தவிர்த்து அனேக இடங்களில் கிடைக்கும் 2ஜி என்னும் குறைந்த வேகம் உள்ள மொபைல் டேட்டா என்னும் சேவையும் மற்றும் ஆன்ட்ராயிட்டின் ஓஎஸ் இன்னும் வேகத்தை குறைக்கும் வகையில் இருப்பதால் இணையச்சேவைக்காகவே பலர் ஆப்பிள் மற்றும் உபுன்ட்டு போன்ற பல வகை ஓஎஸ் அல்லது அந்த வகை மொபைல் ஃபோனுக்கு மாறுவதால் ஆன்ட்ராயிட் உபயோகித்து 2ஜி மூலம் மொபைல் வழியே பிரவுஸிங் செய்பவர்களுக்கு ஏதுவாக லைட்வெர்ஷன் பிரவுசிங் சர்வீஸை துவக்கி

யுள்ளது. இது சுமார் நான்கு மடங்கு இப்போது நீங்கள் உபயோகிக்கும் வேகத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது நீங்கள் நினைப்பது போல வேலை செய்யுமா என்று கேட்டால் இதே மாதிரி இலகுவகை இனையச்சேவையை இந்தோனிஷியா மார்க்கெட்டில் ஆரம்பித்து சக்கை போடு போடுகிறதாம். இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் போன்ற பல நாடுகள் தான் கூகுளின் டார்கெட்டாம்.அடுத்து பிரேசில் போன்ற பல நாடுகள் தான் கூகுளின் டார்கெட்டாம்.

Google India launches LITE version of Internet browsing technology those who has very low speed data connectivity…….