இந்தியாவில் இண்டர்நெட்டுக்கு அடிமைகள் அதிகம்: ஆனால் நெட் ஸ்பீட் சுத்தமா கிடையாது!

நம் இந்தியாவைப் பொறுத்த வரை மிக வேகமாக இண்டர்நெட்டுக்கு அடிமையாக மாறுபவர்களின் எண்ணிக்கை எகிறி கொண்டே வருவதாக அண்மையில் எடுத்த ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருபவர்களில் 65 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகியுள்ளனர். மேலும், ஆன்லை னில் இருப்பவர்களின் முன்னுரிமைகள் பற்றியும் ஆராயப்பட்டது. இதில், 33 சதவீதம் பேர் வழக்கத்திற்கு அதிக மாக செல்பி போட்டோக்களை பதிவு செய்வதை வெறுக்கின்றனர். 40 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களின் இண்டர் நெட் பழக்கவழக்கங்கள் மோசமாக உள்ளது. அதாவது, ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கு இன்வைட் செய் வது, சிம்பதியை உருவாக்குவது போன்ற போஸ்ட்களை பேஸ்புக்கில் பதிவு செய்வது, கோபத்தை வரவழைக் கும் வகையிலான போஸ்ட்களை அப்டேட் செய்வது, வதந்திகளை பரப்புவது, விரும்பத்தகாத தகவல்களை ஷேரிங் செய்வது போன்றவற்றை செய்வதாகவும் தெரிய வந்தது
net speed mar 26
இதனிடையே இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் “Fourth Quarter, 2015, State of the Internet Report” வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது.

இதன்படி உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரி த்துள்ளது. குறிப்பாக, ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது.அதே சமயம்மிகக் குறைந்த சராசரி வேகத்தில் இண்டர்நெட் சேவை யை கொண்டிருக்கும் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின் 14 எம்.பி.பி.எஸ் வேகத் துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஈரான் மற்றும் வியட்நாம் நாடுகள் மிகவும் குறைந்த வேகத்தில் மொபைல் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றன.அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தின் சராசரியில் சிங்கப்பூர் (135.7 எம்.பி. பி.எஸ்) முதலிடத்திலும் இந்தியா (21.2 எம்.பி.பி.எஸ்) கடைசி இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.