September 29, 2021

இந்தியர்கள் இருவருக்கு புனிதர் பட்டம்!

இயேசுகிறிஸ்துவின் வழியில் புனிதமான வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர், இறப்புக்கு பிறகும் மற்றவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்றிருந்தால், அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் உலகின் எந்த இடத்திலும் ஆலயம் எழுப்பி அவருக்கு வணக்கம் செலுத்த கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது.
saints
மேலும் முக்திப்பேறு அளிப்பதற்கு ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். புனிதர் பட்டம் வழங்குவதற்கு மேலும் ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். இந்த அற்புதங்களை அங்கீகரித்து போப் ஆண்டவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பார். இதுதான் நடைமுறை.இந்த வகையில் இந்தியாவை சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவரா, அருட்சகோதரி எப்ரசியா ஆகியோர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். வாடிகனில் கேரளாவை சேர்ந்த இருவருக்கும் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இவர்களுடன் புனிதர் பட்டம் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2008-ல் இந்தியாவை சேர்ந்த அருட்சகோதரி அல்போன்சா புனிதரா அங்கீகரிக்கப்பட்டார். செயின்ட்பீட்டர்ஸ் சதுக்க நிகழ்ச்சியில் இந்தியர்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுக் கொண்டுள்ளனர். பி.ஜே.குரியன் தலைமையிலான இந்திய குழு பங்கேற்றுக் கொண்டுள்ளது. 4 இத்தாலியர்களும் புனிதர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க சபையை சேர்ந்த இறந்த நபருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

புனிதர் பட்டம் வழங்குவதையொட்டி கேரளா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலையங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. வாடிகனில் நடைபெறும் நிகழ்ச்சி ஒருசில கிறிஸ்தவ ஆலயங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.