October 27, 2021

இந்தியன் கவர்மென்ட் ஆபீசருங்க பாரீன் போக கட்டுப்பாடு !

வெளி நாட்டுக்கு அதிகாரிகள் பயணம் மேற் கொள்வது குறித்த விதிமுறையை செயலாளர்களுக்கான ஆய்வு கமிட்டி ஆய்வு செய்து மத்திய அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்த விதிமுறை களில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
government india
அதன்படி, அரசு நிர்வாகத்தில் உள்ள உயர்அதிகாரிகள் வருடத்திற்கு 4 முறைதான் வெளிநாட்டு பயணத்தை மேற் கொள்ள வேண்டும் .வெளிநாட்டு பயணங்களை இந்திய அரசின் செயலாளர்களும் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போதுவெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. தவிர்க்க முடியாமல் வெளிநாடு போக வேண்டியிருந்தால் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளலாம்.

ஒரு துறையின் கேபினட் அமைச்சரும் அவரது துறை செயலாளரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் இருக்க முடியாது. வெளிநாடுகளுக்கு செயலாளர்கள் வருடத்திற்கு 4 முறை செல்ல வேண்டி இருந்தால், அது குறித்து பிரதமரின் அனுமதியை பெற வேண்டும்.

இந்திய அரசு செயலாளர்கள் புதிய விதியின் படி 5 நாட்களுக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. சர்வதேச அமைப்பு அளிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு அந்த சர்வதேச அமைப்பே பயண கட்டணத்தை அளிக்கும். இந்த பயணங்களை மேற் கொள்வதற்கு எந்தவித தடையும் கிடையாது. இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.