October 21, 2021

இதோ… என் தகுதிப் பட்டியல்: ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு மூன்றாம் மடல்!

பா ம க வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள ஒரு ஓப்பன் லட்டரில், “அன்புள்ள நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,வணக்கம்… நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்! தமிழ்நாட்டை சீரழித்ததில் தி.மு.க.வுக்கு உள்ள பங்கு குறித்து நான் எழுதிய கடிதத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆற்றியதாகக் கூறப்படும் பணிகள் குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என்ற எனது இரண்டாவது கடிதத்திற்கும் இதுவரை தங்களிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால், சென்னையில் நேற்று நீங்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது,‘‘ தகுதியில்லாதவர்களுடன் விவாதிக்க மாட்டேன். தேவையில்லாத கடிதங்களையெல்லாம் படிப்பதில்லை’’ என்று கூறியிருக்கிறீர்கள்.
stalin may 8
ஏற்கனவே கூறியதைப் போல நான் உங்களைப் போன்றவன் இல்லை. தகுதியில்லாதவர்களையும் மதிக்கத் தெரிந்தவன். அந்த நாகரீகத்தால் தான் உங்களுக்கு மூன்றாவது முறையாக இப்போது கடிதம் எழுதுகிறேன். தகுதியுள்ளவர்களுடன் மட்டும் தான் விவாதம் நடத்துவேன் என்று நீங்கள் கூறியிருந்ததால் எனது தகுதிகள் என்னென்ன? என்பதை தங்களுக்கு தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதோ எனது தகுதிகள்…
1) பெயர்:
மருத்துவர் அன்புமணி இராமதாசு,
2) வயது 46
3) கல்வித் தகுதி:
* எம்.பி.பி.எஸ்., சென்னை மருத்துவக் கல்லூரி.
(பொதுப்போட்டியில் (Open Competition) சேர்ந்தேன். உங்கள் துதிபாடிகள் கூறுவதைப் போல திராவிட இயக்கத்தொட்டிலில் வளர்ந்து வாய்ப்பு பெறவில்லை)
* 12& ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பழைய தென்னாற்காடு மாவட்ட அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.
4) பணிகளும் பிற சேவைகளும்:

நான் வளர்த்துக் கொண்டுள்ள தகுதிகளை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன்.

அன்பு நண்பர் ஸ்டாலின் அவர்களே…எனக்கு இப்போது 46 வயதாகிறது. நீங்கள் என்னுடன் விவாதத்திற்கு வர வேண்டுமானால் எனக்கு வேறு என்ன தகுதி வேண்டும் என்பதை சொல்லுங்கள். இதற்கெல்லாம் மேலாக தமிழக மக்கள் அறிந்து கொள்ள வசதியாக உங்களுடைய தகுதி என்ன? என்பதையும் தெரிவிக்க வேண்டும். 50 ஆண்டு கால தமிழக நிலவரம் குறித்து உங்களுடன் ஒரே மேடையில் நேருக்குநேர் விவாதம் நடத்த உங்களுக்கு எனது அன்பான அழைப்பு மற்றும் வேண்டுகோள். நன்றி!”என்று தெரிவித்துள்ளார்