October 16, 2021

இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி!

நேற்று ரிமோட்டில் சானல்களை திருப்பிக் கொண்டே சென்றபோது ஜீ டிவியில் ஒளிபரப் பாகிற ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி’ -ய கொஞ்ச நேரம் பாத்து தொலைக்க வேண்டிய தாப்போச்சு. பொதுவா இந்நிகழ்ச்சியை எங்கள் வீட்டில் பார்க்க தடை உண்டு. என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று சிறிது நேரம் பார்த்தால் ஒரு இளம் பெண்ணை நிகழ்ச்சி தொகுப்பாளினி ‘உண்மையைச்சொல் உண்மையைச் சொல்’ -ன்னு கட்டாயப்படுத் திக் கொண்டு இருந்தார். அந்தப் பெண் மிகுந்த சங்கடத்தில் நெளிவதைப் பார்க்க முடிந்தது.
sol unmai
விஷயம் இது தான். அந்த இளம் வயதுப் பெண் திருமணத்திற்கு முன்னாலேயே கர்ப்பமடைந் தது எப்படி என்பது பற்றி அந்தப் பெண்ணிடம் ஸ்கேனிங் ரிப்போர்ட்டுகளை காண்பித்து ‘உண்மையச் சொல்லு’, ‘உண்மையச்சொல்லு’ ன்னு கேட்டு ‘உண்மையச் சொன்னாத்தான் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்’- னு சொல்லி கடைசியில அந்தப் பொண்ணு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி கிட்ட ‘உங்க கிட்ட தனியாப் பேசனும்’ னு சொல்ல ஸ்டுடியோவினை விட்டு உள்ளே அழைத்துப் போய் ‘இப்ப சொல்லும்மா’ ன்னு சொல்லி அந்தப் பொண்ணு சொன்னத முகத்தை மட்டும் காட்டாம ஆடியோவை மக்கள் கேக்கிற மாதிரி ஒளிபரப்பி அந்த பொண்ணோட மொத்த மானத்தையும் வாங்கிட்டாங்க.

தன்னுடைய விஷயம் அந்த தொகுப் பாளினிக்கு மட்டுமேதெரியும் என்ற நம்பிக் கையோடு அந்த பெண் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் இவர்கள் அதனை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.. உண்மை வெளிச் சத்திற்கு வந்த பிறகு தாலி கட்டிய கணவன் இனி எனக்கும் அவளுக்குமான உறவு இல்லை என்று சொல்லிவிட்டு டைவர்ஸ் வேண்டும் என்று கணவன் கேட்க அந்த பெண்ணிடம் தொகுப்பாளினி சம்மதம் கேட்க அதற்கு சம்மதம் தெரிவிக்க அவர் கிளம்பிவிட்டார்.

அந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான பின்னர் தான் தான், தான் இரகசியமாக சொல்லியது இலட்சோப இலட்சம் பேருக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றது என்று அந்தப் பெண் அறிந்திருப்பாள்.. ஏதோ ஒரு சில சூழ்நிலை யில் தவறு செய்துவிட்ட அந்தப் பெண் இனி எங்கு சென்றாலும் அடையாளம் காணப்படு வாள். தான் திருமணத்திற்கு முன்னாள் கற்பிழந்தவள் என்று எல்லோருக்கும் தெரிய வரும். வெளியில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. இவ்வளவு ஏன் அவமானம் தாங்க முடியாமல் வேறு விதமான விபரீத முடிவு களைக்கூட எடுக்க நேரிடும். அப்படி ஒரு விபரீத முடிவினை அந்தப் பெண்ணும் குடும்பமும் எடுத்தால் அதற்கு ஜீடிவி எந்த வகையில் பொறுப்பேற்கும்?

இந்த கேவலமான செயலைத்தான் ஒரு தொலைக்காட்சி நாகரீகமாக கருதுகின்றதா? இந்த நிகழ்ச்சிக்குTRP ரேட்டிங் எங்கோ போய் நிற்கின்றதாம்.. ஏன் இருக்காது? அடுத்தவங்க ளோட வீக்னசை இப்படி அம்பலப்படுத்தி அதுல வர்ற வருமானத்துல குளிர்காயறத விட நாலு தெரு போய் பிச்சை எடுத்து பிழைக் கலாம்.. இப்படியான நிகழ்ச்சிகளுக்கு சென்றால் தனக்கு உதவி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து போனவர்கள்தான் ஏராளம். பிரச்சனைகளை தீர்த்து வைக்க காவல் நிலையம் இருக்கு, நீதிமன்றங்கள் இருக்கு..இவர்களுக்கு யார் இப்படி எல்லாம் கட்டப் பஞ்சாயத்து செய்ய உரிமை கொடுத்தது?

சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூட இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க மாட்டார். மிரட்ட மாட்டார். ‘எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு. நீயா சொல்றியா இல்லே எங்க கிட்ட இருக்கிற ஆதாரங்களை காண்பிக்கவா’? என்று மிரட்டல் விடுத்தே உண்மைகளை வரவழைக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்களை நம்பி மாட்டிக்கொள்வது அப்பாவி ஏழைகளே!

பெண்ணியவாதிகள் இங்கே வந்து சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பொங்கு பொங்குன்னு பொங்கறாங்களே! இப்படி ஒரு தனியார் தொலைக்காட்சி பெண்களோட அந்தரங்க விஷயங்களை பகிரங்கமா நாள்தோறும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அசிங்கப்படுத்திகிட்டு இருக்கே!! இதை எல்லாம் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்த மாட்டாங்களா? சமூக ஆர்வலர்கள் தன்னார்வ அமைப்புகள் வழக்கறிஞர்கள் என்று யாருமே இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி போராட்டமோ அல்லது இதனை எதிர்த்து வழக்குகளையோ இதுவரை போடவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.

இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி

அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து போராடினால் இந் நிகழ்ச்சியை தடை செய்ய முடியும்….

‘பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவது’ என்ற கோணத்தில் தான் சென்று கொண்டிருக்கின்றது நமது சமூகம்..

1 thought on “இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி!

Comments are closed.